விளையாட்டு

மீண்டும் இவரா ? இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலே இருந்து இருக்கலாம்.. BCCI-யை கிண்டல் செய்யும் ரசிகர்கள் !

தேர்வுக் குழுத் தலைவராக மீண்டும் சேத்தன் ஷர்மா நியமனத்துக்கான ரசிகர்கள் பிசிசிஐ-யை விமர்சித்து வருகின்றனர்.

மீண்டும் இவரா ? இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலே இருந்து இருக்கலாம்.. BCCI-யை கிண்டல் செய்யும் ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக மீண்டும் சேத்தன் ஷர்மாவையே நியமித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). அதுமட்டுமல்லாமல் ஆண்கள் அணியின் தேர்வுக் குழுவின் மற்ற 4 உறுப்பினர்களின் பெயர்களையும் நேற்று அறிவித்திருக்கிறது. சேத்தன் ஷர்மா இந்தக் குழுவின் தலைவராக இருக்கும் நிலையில், ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரதோ பேனர்ஜி, சலீல் அன்கோலா, ஶ்ரீதரன் ஷரத் ஆகியோரும் தேர்வுக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த அறிவிப்பை தங்கள் டிவிட்டர் பதிவில் உறுதி செய்திருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். "இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு உறுப்பினர்களை பிசிசிஐ உறுதி செய்திருக்கிறது. தேர்வுக் குழுவின் தலைவர் பதவிக்கு சேத்தன் ஷர்மாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது" என்று அந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மீண்டும் இவரா ? இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலே இருந்து இருக்கலாம்.. BCCI-யை கிண்டல் செய்யும் ரசிகர்கள் !

நேற்று வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 5 நபர்கள் கொண்ட இந்த தேர்வுக் குழுவுக்கு மொத்தம் 11 நபர்களிடம் கிரிக்கெட் அட்வைசரி கமிட்டி நேர்காணல் நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "இந்திய ஆண்கள் தேசிய சீனியர் அணியின் தேர்வுக் குழுவை நியமிப்பதற்கான பணியை, சுலக்‌ஷனா நாயக், அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபீ ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் அட்வைசரி கமிட்டி (CAC) மேற்கொண்டது. 2022 நவம்பர் 18ல், ஐந்து இடங்களுக்கான வாய்ப்புகள் பற்றி பிசிசிஐ அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவிப்பு வெளியான பிறகு, சுமார் 600விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தெளிவாக அலசி ஆராயப்பட்ட பிறகு, அந்த 600 விண்ணப்பங்களில் இருந்து, 11 நபர்களின் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அந்த நேர்காணல்களின் அடிப்படையில், குறிப்பிட்ட அந்த ஐந்து பேரை தேசிய ஆண்கள் சீனியர் அணியின் தேர்வுக் குழுவில் இணைக்குமாறு பிசிசிஐ-க்கு பரிந்துரைத்திருக்கிறது கிரிக்கெட் அட்வைசரி கமிட்டி" என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மீண்டும் இவரா ? இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலே இருந்து இருக்கலாம்.. BCCI-யை கிண்டல் செய்யும் ரசிகர்கள் !

கடந்த ஆண்டு நடந்த சர்வதேச டி20 உலக் கோப்பையில் இந்திய அணி குரூப் பிரிவிலேயே வெளியேறியது. குறிப்பாக உலகக் கோப்பை அரங்கில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோற்றது இந்தியா. அதன் விளைவாக சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக் குழுவைக் கலைத்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். சேத்தன் ஷர்மா பதவியில் இருந்தபோது 2021 ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டிக்கும் கூட இந்திய அணி தகுதி பெறத் தவறியது.

இப்போது சேத்தன் ஷர்மா மீண்டும் தேர்வுக் குழுவின் தலைவராகப் பதவியேற்றிருக்கும் நிலையில், அவருக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது. 2023 ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கவிருக்கிறது. அதனால் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்திய அணி எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. 2011ல் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, 2013ல் சாம்பியன்ஸ் டிராபியையும் எம்.எஸ்.தோனி தலைமையில் வென்றது. அதன்பிறகு எந்தத் தொடரையும் வெல்லாமல் இருக்கும் நிலையில், சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய ஒரு அணியை சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக் குழு தயார் செய்தாகவேண்டும். ஆனால், அதேநேரம் இந்த நியமனத்துக்கான ரசிகர்கள் பிசிசிஐ-யை விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories