விளையாட்டு

அற்புதமான வீரர்,, ஆனால் இதுதான் அவரின் முக்கிய பிரச்சினை - சஞ்சு சாம்சன் குறித்து கவாஸ்கர் கூறியது என்ன ?

இலங்கைக்கு எதிரான முதலாவது போட்டியில் சஞ்சு சாம்சனின் ஆட்டம் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

அற்புதமான வீரர்,, ஆனால் இதுதான் அவரின் முக்கிய பிரச்சினை - சஞ்சு சாம்சன் குறித்து கவாஸ்கர் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இலங்கைக்கு எதிரான முதல் சர்வதேச டி20 போட்டி சஞ்சு சாம்சனுக்கு சிறப்பாக அமையவில்லை. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த அந்தப் போட்டியில் பேட்டிங்கின்போது தடுமாறிய அவர், ஃபீல்டிங்கிலும் சொதப்பி ஒரு கேட்சை தவறவிட்டிருந்தார். கரியர் அரம்பத்தில் இருந்தே சாம்சன் மீது இருக்கும் விமர்சனம், தன்னுடைய திறமையை அவர் சர்வதேச அரங்கில் பயன்படுத்துவது இல்லை என்பதுதான். அதைத்தான் இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

5 பந்துகளில் 5 ரன்கள் அடித்திருந்த சாம்சன், தனஞ்சயா டி சில்வாவின் பந்தை சரியாக டைமிங் செய்யாமல் தூக்கி அடித்து கேட்ச் ஆனார். இதில் இன்னும் மோசமான விஷயம் என்னவெனில், அதற்கு முந்தைய பந்தில் தான் அவர் அவுட் ஆவதில் இருந்து தப்பித்திருப்பார். பௌண்டரி லைனில் ஃபீல்டர் கேட்சைத் தவறவிட, தப்பித்திருப்பார் சாம்சன். இலங்கை பந்துவீச்சை சரியாகக் கணித்து ஒரு இன்னிங்ஸைக் கட்டமைக்காமல், தன்னுடைய அணுகுமுறையைத் தொடர்ந்து, விரைவிலேயே ஆட்டமிழந்தார் அவர்.

அற்புதமான வீரர்,, ஆனால் இதுதான் அவரின் முக்கிய பிரச்சினை - சஞ்சு சாம்சன் குறித்து கவாஸ்கர் கூறியது என்ன ?

"இந்த முறை எட்ஜ் ஆகி ஷார்ட் தேர்ட் மேன் திசையில் ஆட்டமிழந்திருக்கிறார் சாம்சன். அவர் ஒரு அற்புதமான வீரர். அவருக்கு அபரிதமான திறமை இருக்கிறது. ஆனால் அவர் தேர்வு செய்யும் ஷாட்கள் தான் அவருக்குப் பிரச்னையாக அமைந்துவிடுகிறது. அப்படியான தருணங்களில் இதுவும் ஒன்று" என்று கூறினார் கவாஸ்கர்.

இஷன் கிஷன் விக்கெட் கீப்பராக செயல்பட்டதால், சாம்சன் ஃபீல்டிங் செய்தார். ஃபீல்டிங்கில் சில தவறுகளும் செய்துகொண்டிருந்தார். இலங்கை இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே முதல் தவறு அரங்கேறியது. தன் முதல் பந்திலேயே அட்டகாசமான ஸ்விங் மூலம் இலங்கை ஓப்பனர் பதும் நிசன்காவை தடுமாற வைத்தார் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா. இரண்டாவது பந்தில் நிசன்கா எட்ஜ் ஆக, மிட் ஆஃப் திசையில் பறந்தது பந்து. மிகவும் எளிதான கேட்சை சொதப்பி தவறவிட்டார் சாம்சன். தேவையில்லாமல் அவர் டைவ் அடிக்க, கீழே கிரவுண்டைத் தொட்டபோது பந்து கையிலிருந்து தவறியது.

அற்புதமான வீரர்,, ஆனால் இதுதான் அவரின் முக்கிய பிரச்சினை - சஞ்சு சாம்சன் குறித்து கவாஸ்கர் கூறியது என்ன ?

ஆனால் அதன்பிறகு மீண்டு எழுந்த அவர், சிறப்பாக 2 கேட்சுகள் பிடித்து குசல் மெண்டிஸ், டி சில்வா இருவரும் ஆட்டமிழக்கக் காரணமாக அமைந்தார். குறிப்பாக குசல் மெண்டிஸின் கேட்ச் பாராட்டவேண்டிய ஒன்று. ஆனால் அவரின் தினம் மோசமாகவே முடிந்தது. இன்னொரு கேட்ச் வாய்ப்பும் வந்தது. தேர்ட் மேன் திசையில் இருந்து ஓடி வந்து அதைப் பிடிக்க முயற்சி செய்த அவர், அதைத் தவறவிட்டார். அவர் முழங்கால் தடுமாறியதால் கீழே விழுந்தார் சாம்சன். அவர் கேட்சை விட, பந்தும் பௌண்டரிக்குச் சென்றது. பௌலர் உம்ரன் மாலிக் உள்பட அனைவருமே அவர் மீது வருதம் தெரிவித்திருந்தனர்.

சாம்சனின் பேட்டிங் பற்றிப் பேசிய இந்திய முன்னாள் ஓப்பனர் கம்பீரும், விரைவாக சாம்சன் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கூறினார். "சஞ்சு சாம்சன் எப்படியான திறமைகள் கொண்ட பேட்ஸ்மேன் என்பதை நாம் நிறையவே பேசியிருக்கிறோம். ஆனால், அவர் தனக்கு இருக்கும் திறமைகளைப் பயன்படுத்தி கிடைக்கும் வாய்ப்புகளை உபயோகித்துக்கொள்ளவேண்டும்" என்று கூறினார் கம்பீர்.

banner

Related Stories

Related Stories