விளையாட்டு

தொடர் சொதப்பல்.. இலங்கை தொடருக்காக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட இளம் வீரர்!

தொடர்ந்து சரியாக விளையாடாததால் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட்டுள்ளார்.

தொடர் சொதப்பல்.. இலங்கை தொடருக்காக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட இளம் வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அணி வங்கதேசத் தொடரை முடித்துள்ள நிலையில், அடுத்து இலங்கை அணியுடன் விளையாடுகிறது. இதற்காக இலங்கை அணி இந்தியா வருகிறது. இந்த தொடரில் 3 டி20 போடிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளின் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடுகிறது..

இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் பெயர் பட்டியல் வேற்று வெளியானது. இதில், தொடர்ந்து சொதப்பி வந்த ரிஷப் பண்டின் பெயர் இடம் பெறாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்சியை கொடுத்துள்ளது. அதேநேரம் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்ட வந்த சஞ்சு சாம்சனுக்கு இலங்கை தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர் சொதப்பல்.. இலங்கை தொடருக்காக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட இளம் வீரர்!

ஆனால் டி20 போட்டிகளில் மட்டுமே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டியில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதையடுத்து ஏன் ஒருநாள் போட்டியில் அவர் இடம் பெறவில்லை என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் ரிஷப் பண்டை விட இஷான் கிஷான், சஞ்சு சாம்வன் போன்ற வீரர்கள் முன்னிலையில் உள்ளனர் என கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இலங்கைக்கு எதிரான டி20 அணி எப்படி செல்கிறது என்பதை பார்க்க ஆவலாக உள்ளது.

அடுத்த டி20 உலகக் கோப்பைக்கான முன்னோட்டமாக இந்த அணி இருக்க வாய்ப்புள்ளது. ரிஷப் பண்டை விட இஷான் கிஷான், ருத்ராஜ், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் போன்ற வீரர்கள் டாப் 4 ல் உள்ளனர். இதனால் ரிஷப் பண்டிற்கு சிக்கல் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories