விளையாட்டு

'சாதனையில் மதி மயங்கி விடாதே'.. இஷான் கிஷானுக்கு அட்வைஸ் செய்த முன்னாள் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்!

2023ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக இஷான் கிஷான் இறங்க வாய்ப்பு உள்ளதாக ப்ரெட் லீ தெரிவித்துள்ளார்.

'சாதனையில் மதி மயங்கி விடாதே'.. இஷான் கிஷானுக்கு அட்வைஸ் செய்த முன்னாள் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அணியில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷல் படேல், பண்ட், வருண் சக்கரவர்த்தி என இளம் வீரர்களின் பட்டியல் நீண்ட உள்ளது. இதனால் இளம் வீரர்களுக்குள் இந்திய அணியில் தங்களுக்கு என்று ஒரு நிலையான இடத்தை பிடிப்பதற்கு கடும் போட்டிகள் எழுந்துள்ளது.

கிடைக்கும் ஒன்று இரண்டு போட்டிகளிலும் அவர்கள் தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இளம் வீரர்கள் உள்ளனர். இது அவர்களுக்குக் கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இவர்களால் மூத்த வீரர்களுக்குச் சிக்கல் உள்ளது.

'சாதனையில் மதி மயங்கி விடாதே'.. இஷான் கிஷானுக்கு அட்வைஸ் செய்த முன்னாள் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்!

என்னதான் சிறந்த வீரராக இருந்தாலும் தொடர்ந்து சரியாக விளையாடவில்லை என்றால் விமர்சனத்தில் இருந்து தப்ப முடியாது. அதிலும் அவர் இடத்தை நிரப்ப இரண்டுக்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தால் இன்னும் அவரின் நிலை படும் கஷ்டம்தான். இந்த சிக்கலைத்தான் தற்போது வீராட் கோலி, ரோகித் ஷர்மா,கே.எல்.ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் சந்தித்து வருகின்றனர்.

மேலும் இளம் வீரர்களின் திறமையை வெளி கொண்டு வரும் விதமாகவும், ஒரு வலுவான இந்திய அணியைக் கட்டமைக்கும் விதமாகவும் தான் இளம் வீரர்களை கொண்டு ஜிம்பாமே, நியூசிலாந்து போன்ற தொடர்களில் இந்திய அணி விளையாடியது.

'சாதனையில் மதி மயங்கி விடாதே'.. இஷான் கிஷானுக்கு அட்வைஸ் செய்த முன்னாள் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்!

இந்த தொடர்களின் எல்லாம் இளம் வீரர்கள் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் இளம் வீரர் இஷான் கிஷான் 200 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய அணியில் இனி தனது பெயரும் இருக்கும் என்பதை இந்த இரட்டை சதம் மூலம் நிரூபித்து உள்ளார் இஷான் கிஷான்.

இந்நிலையில், இஷான் கிஷான் இந்த சாதனையில் இருந்து வெளிவர வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் வேகபந்து வீச்சாளர் ப்ரேட் லீ தெரிவித்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சி ஒன்றில் பேசிய ப்ரேட் லீ, வங்கதேசத்து உடனான போட்டியில் இஷான் கிஷான் ஆடிய ஆட்டம் என்னை பிரமிக்க வைத்தது.

இன்னும் பல சாதனைகளை அவரால் படைக்க முடியும். ஆனால் அவர் ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் 2023ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரராக இஷான் கிஷான் விளையாடுவார்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories