விளையாட்டு

தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்பு.. அழைப்பு விடுத்த அயர்லாந்து அணி: சஞ்சு சாம்சனின் பதில் என்ன?

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அயர்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்பு.. அழைப்பு விடுத்த அயர்லாந்து அணி: சஞ்சு சாம்சனின் பதில் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2014ம் ஆண்டு Under-19 உலகக் கோப்பை போட்டியில் துணை கேப்டனாக இருந்து சிறப்பாகச் செயல்பட்டவர் சஞ்சு சாம்சன். இந்த தொடரில் 54 பந்தில் 85 ரன்களை அடித்து அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். இதன் பிறகு இந்திய அணியில் 2015ம் ஆண்டு அறிமுகமானார். இவரின் முதல் போட்டி ஜிம்பாபே உடன்தான். இதுவும் டி20 போட்டி.

அதன் பிறகு தொடர்சியாக இந்திய அணியில் இடம் பெற்று வருகிறார். விக்கெட் கீப்பராக இருப்பதால் இவர் இந்திய அணியில் நுழையும் போது தோனி, தினேஷ் கார்த்தி போன்ற முன்னணி வீரர்கள் இருந்ததால் இவருக்குத் தொடர்ந்து விளையாட வாய்ப்பு கொடுப்பதில் சிரமம் இருந்தது. இதனால் டி20 போட்டியில் மட்டுமே அதிகமாக விளையாடினார்.

தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்பு.. அழைப்பு விடுத்த அயர்லாந்து அணி: சஞ்சு சாம்சனின் பதில் என்ன?

கிட்டத்தட்ட இந்திய அணியில் 8 ஆண்டுகளாக சஞ்சு சாம்சன் இருந்தாலும் இதுவரை 11 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார். அதேபோல் 16 டி20 போட்டியில் விளையாடியுள்ளார். மேலும் இரண்டு அரைசதம் அடித்துள்ளார். அவரின் அதிகபட்ச ரன் 86. அதுவும் நாட் அவுட்.

இவர் சர்வதேச போட்டியில் விளையாடியதை விட ஐபிஎல் போட்டியில்தான் அதிகம் விளையாடியுள்ளார். கிட்டத்தட்ட 226 போட்டிகளில் பங்கேற்று தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார் .

2013ம் ஆண்டிலிருந்து 2022ம் ஆண்டு அவரை ராஜஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார். இரண்டு முறை மட்டும் டெல்லி அணிக்காக விளையாடினார். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டே வருகிறது.

தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்பு.. அழைப்பு விடுத்த அயர்லாந்து அணி: சஞ்சு சாம்சனின் பதில் என்ன?

கிடைக்கும் ஒரு போட்டியாக இருந்தாலும் கூட அதில் தனது முழு பலத்தையும் சஞ்சு சாம்சன் காட்டினாலும் அடுத்த தொடரில் அவர் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. அண்மையில் நடந்த முடிந்த நியூசிலாந்து மற்றும் வங்கசேத தொடரில் மூத்த வீரர்கள் இல்லாதபோதும் சங்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இதனால் அவரது ரசிகர்கள் #Casteist_BCCI வைரலாக்கினர். மேலும் வெளிப்படையாகவே பலரும் இந்திய அணியில் சாதிப்பாகுபாடு இருப்பதாகக் கூற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் அயர்லாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்பு.. அழைப்பு விடுத்த அயர்லாந்து அணி: சஞ்சு சாம்சனின் பதில் என்ன?

அந்த அழைப்பில், "சஞ்சு சாம்சன் அனுமதி கொடுத்தால் எங்கள் அணியின் கேப்டாக அவர் நியமிக்கப்படுவார். எங்கள் அணியிலிருந்து அனைத்து போட்டிகளிலும் விளையாட நாங்கள் அனுமதிப்போம். எங்களுக்கு அவரை போன்ற ஒரு சிறப்பான வீரர் தேவை" என கூறியுள்ளது.

இந்த அழைப்பை அடுத்து சஞ்சு சாம்சன், "உங்கள் அழைப்பிற்கு நன்றி. ஆனால் நான் இந்திய அணிக்காக விளையாடவே ஆசைப்படுகிறேன். தற்போது நான் இந்திய அணிக்கு என்னை அழைப்பார்கள் என்பதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறேன். இந்தியாவை தவிற வேறு எந்த அணிக்காகவும் நான் விளையாட மாட்டேன்" என தெரிவித்துள்ளார். 28 வயதாகும் சஞ்சு சாம்சன் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories