விளையாட்டு

மயிரிழையில் உயிர்தப்பிய மெஸ்ஸி :அதிர்ந்துபோன ரசிகர்கள்..உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டத்தின் போது பரபரப்பு!

அர்ஜென்டினா ரசிகர்களுடனான வெற்றிகொண்டாட்டத்தின் போது மெஸ்ஸி உள்ளிட்ட அர்ஜென்டினா வீரர்கள் மயிரிழையில் உயிர்தப்பிய நிகழ்வு நடந்துள்ளது.

மயிரிழையில் உயிர்தப்பிய மெஸ்ஸி :அதிர்ந்துபோன ரசிகர்கள்..உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டத்தின் போது பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

மயிரிழையில் உயிர்தப்பிய மெஸ்ஸி :அதிர்ந்துபோன ரசிகர்கள்..உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டத்தின் போது பரபரப்பு!

முதல் 70 நிமிடம் ஆடுவது பிரான்ஸ் அணிதானா என்ற கேள்வி எழும் வகையில் அந்த அணி மிகமோசமாக ஆடியது. அர்ஜென்டினாவில் அதிரடிக்கு முன்னர் பிரான்ஸ் அணியால் நிற்கவே முடியவில்லை. ஆனால், அதன்பின்னர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.

90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றதில் உலகத்தில் உள்ள மூளை முடுக்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

அர்ஜென்டினாவிலும் கொண்டாட்டம் உச்சத்தை அடைந்துள்ளது. கோப்பையை வென்றபின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்கள் தாயகம் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பல லட்சம் வீரர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்களின் வரவேற்பை ஏற்ற அர்ஜென்டினா வீரர்களும் திறந்த வெளி பேருந்தில் உலகக்கோப்பையை வைத்து ரசிகர்களிடையே ஊர்வலம் சென்றனர்.

அர்ஜென்டினா வீரர்கள் மெஸ்ஸி, டி மரியா, லியாண்ட்ரோ பரேடைஸ், டி பால், ஒட்டமெண்டி ஆகியோர் பேருந்து மீது அமர்ந்து ரசிகர்களுக்கு கையசைத்து வண்ணம் இருந்தனர். அப்போது சாலையின் குறுக்கே சென்ற ​​ஒரு மின்சார கேபிள் அவர்கள் மீது அபாயகரமாக மோதும் வகையில் வந்தது. இதனை கவனித்த வீரர்கள் உடனடியாக குவிந்ததால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்த கால்பந்து சங்கத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories