விளையாட்டு

"IPL-ஐ விட பாகிஸ்தான் சூப்பர் லீக்தான் பெஸ்ட்" - T20 தரவரிசையில் நம்பர் 2-ல் இருக்கும் வீரர் கருத்து !

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஐபிஎல்லை விட பாகிஸ்தான் சூப்பர் லீக்தான் உலகிலேயே மிகவும் கடினமான லீக் போட்டி என கூறியுள்ளார்.

"IPL-ஐ விட பாகிஸ்தான் சூப்பர் லீக்தான் பெஸ்ட்" -  T20 தரவரிசையில் நம்பர் 2-ல் இருக்கும் வீரர் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

"IPL-ஐ விட பாகிஸ்தான் சூப்பர் லீக்தான் பெஸ்ட்" -  T20 தரவரிசையில் நம்பர் 2-ல் இருக்கும் வீரர் கருத்து !
Ashley Allen-IDI

ஐ.பி.எல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐ.பி.எல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

ஐபிஎல் தொடரில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் சேர்க்கப்படாத நிலையில், அந்த நாட்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக் எனப்படும் PSL லீக் போட்டி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஐபிஎல்லை விட பாகிஸ்தான் சூப்பர் லீக்தான் உலகிலேயே மிகவும் கடினமான லீக் போட்டி என கூறியுள்ளார்.

"IPL-ஐ விட பாகிஸ்தான் சூப்பர் லீக்தான் பெஸ்ட்" -  T20 தரவரிசையில் நம்பர் 2-ல் இருக்கும் வீரர் கருத்து !

இது தொடர்பாக பேசிய அவர், "ஒரு வீரராக என்னைப் பொறுத்தவரை PSL உலக அரங்கில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. PSL -லில் விளையாடிய உலகெங்கிலும் உள்ள வீரர்களிடம் PSL கடினமா? இல்லை ஐபிஎல் கடினமா? என கேட்டால் அவர்கள் PSL -தான் மிகவும் கடினமானது என கூறுவர். பாகிஸ்தான் அணி சிறந்த மாற்று வீரர்களை கொண்டுள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் PSL தான் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரின் இந்த கருத்தை இந்திய ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories