விளையாட்டு

முடிவுக்கு வந்த 'Fab 4' யுகம்.. டெஸ்ட் கேப்டன் பதவியை உதறித்தள்ளினார் கேன் வில்லியம்சன் !

நியூஸிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து யாரும் எதிர்பாராத நிலையில் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

முடிவுக்கு வந்த 'Fab 4' யுகம்..  டெஸ்ட் கேப்டன் பதவியை உதறித்தள்ளினார் கேன் வில்லியம்சன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவுக்கு சச்சின் டெண்டுல்கர், வெஸ்ட் இண்டீஸுக்கு விவியன் ரிச்சர்ட்ஸ், ஆஸ்திரேலியாவுக்கு சொல்லவே வேண்டாம் அவர்கள் லெஜண்டுகளை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும் மெஷின். ஆனால், நியுசிலாந்துக்கு அப்படி காலம் கடந்தும் நிற்கக்கூடிய வகையில் ஒரு வீரர் இருந்திருக்கிறாரா?

ரிச்சர்ட் ஹாட்லி, மார்டின் க்ரோ, க்றிஸ் கேர்னஸ் என ஒரு சில வீரர்கள் இருந்தாலும், இன்றைக்கு இவர்களெல்லாம் கூகுள் செய்து தெரிந்துகொள்ளும் அளவில்தான் இருக்கிறார்கள். நியுசிலாந்து என்றவுடன் இவர்களின் பெயர்கள் எல்லாம் நமக்கு நியாபகம் வருவதில்லையே! ஃப்ளெம்மிங், வெட்டோரி, மெக்கெல்லம் என பிரபலமான வீரர்கள் சிலர் இருந்தாலும் 'தி பெஸ்ட்' ஆக நியுசிலாந்து என்றால் இவர்தான் என்று சொல்லுமளவுக்கு ஒரு வீரர் அந்த அணிக்கு கிடைக்காமல்தான் இருந்தார். அதாவது, காலம் கடந்து நிற்கக்கூடிய ஒரு வீரர் நியுசிக்கு இல்லவே இல்லை. அந்த குறையைப் போக்க, காலமே கொடுத்திருக்கும் பதில்தான் 'கேன் வில்லியம்சன்'.

முடிவுக்கு வந்த 'Fab 4' யுகம்..  டெஸ்ட் கேப்டன் பதவியை உதறித்தள்ளினார் கேன் வில்லியம்சன் !

இன்னும் 50-100 வருடங்கள் கழித்தும் கூட 'நியுசிலாந்து' என்று சொன்னால் முதலில் வில்லியம்சனின் முகமே முன் வந்து நிற்கும் அளவுக்கு தரமான சம்பவங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் 'கேன் வில்லியம்சன்'. சர்வதேச அளவில் எந்த கோப்பையும் வெல்லாமல் தவித்த அந்த அணிக்கு தனது தலைமையில் 'டெஸ்ட் சாம்பியன்ஷிப்' வென்றுகொடுத்த மீட்பர்.

தனது நுட்பமான தலைமை காரணமாக 50 ஓவர் உலககோப்பை இறுதிப்போட்டியில் தனது அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றிருப்பார். டெஸ்ட் போட்டியில் முதல் இடத்தை அலங்கரித்து. டெஸ்ட். ஒருநாள்,டி20 என அனைத்திலும் முதல் 10 இடத்துக்குள் இருந்து சாதனை படித்திருப்பார். நியூஸிலாந்து அணி என்றால் அது வில்லியம்சன்தான் என சொல்லும் அளவு அணியின் முகமாகவே உலகெங்கும் பார்க்கப்பட்டார்.

முடிவுக்கு வந்த 'Fab 4' யுகம்..  டெஸ்ட் கேப்டன் பதவியை உதறித்தள்ளினார் கேன் வில்லியம்சன் !

யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கு ஏற்ப வில்லியம்சனுக்கும் சறுக்கல் ஏற்பட்டது. அணியின் தொடர் தோல்விகள் அவரின் தலையில் குவிந்தது. மேலும், ஒருநாள், டி20 அணியில் இருந்து அவரை நீக்க வேண்டும், அங்கும் வந்து டெஸ்ட் போட்டி ஆடுகிறார் என்றெல்லாம் அவர்மேல் விமர்சனங்கள் குவிந்தன.

இந்த நிலையில், திடீர் அதிர்ச்சியாக தனது டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து யாரும் எதிர்பாராத நிலையில் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். இது குறித்து பேசிய அவர் "அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது இதுதான் சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை.

முடிவுக்கு வந்த 'Fab 4' யுகம்..  டெஸ்ட் கேப்டன் பதவியை உதறித்தள்ளினார் கேன் வில்லியம்சன் !

என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டின் உச்ச நிலையாகும். டெஸ்டில் அணியை வழிநடத்தும் சவால்களை நான் அனுபவித்தேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் இந்த முடிவுக்கான நேரம் சரியானது" எனக் கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து அணியின் கேப்டனாக மூத்த வீரர் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமுறையில் சிறந்த வீரர்கள் என அழைக்கப்பட்ட 'Fab 4' வீரர்களின் ஒருவராக திகழ்ந்த அவர், அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள சக வீரர்களை போலவே தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி அதிர்ச்சி அளித்துள்ளார். எனினும் தொடர்ந்து அவர் வீரராக அணிக்கு தனது சிறப்பான பங்களிப்பை கொடுப்பார் என நம்பலாம்.

banner

Related Stories

Related Stories