விளையாட்டு

கிண்டல் செய்த ரசிகர்..ஆத்திரத்தில் மைதானத்தில் அடிக்க பாய்ந்த பாகிஸ்தான் வீரர்..வெளியான அதிர்ச்சி வீடியோ!

கிண்டல் செய்த ரசிகரை பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தாக்கியது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிண்டல் செய்த ரசிகர்..ஆத்திரத்தில் மைதானத்தில் அடிக்க பாய்ந்த பாகிஸ்தான் வீரர்..வெளியான அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2017-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியை இந்திய ரசிகர்களால் அத்தனை எளிதான மறக்கமுடியாது. பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் நிச்சயம் வெற்றிபெற்று கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிப்போட்டியில் காட்சிகள் மாறியது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 338 ரன்கள் குவிக்க அடுத்து ஆடிய இந்திய அணி 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வில்லனாகவும் பாகிஸ்தான் அணியின் கதாநாயகனாகவும் மாறினார் இளம்வீரர் ஹசன் அலி.

கிண்டல் செய்த ரசிகர்..ஆத்திரத்தில் மைதானத்தில் அடிக்க பாய்ந்த பாகிஸ்தான் வீரர்..வெளியான அதிர்ச்சி வீடியோ!

ஹசன் அலி அந்த தொடரில் மட்டும் 13 விக்கெட்டுகளை அசத்தினார். தற்போதுவரை இவர் 21 டெஸ்ட் போட்டிகளில் 77 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 90 விக்கெட்டுகளையும் டி20 கிரிக்கெட்டில் 60 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆனால் காயம் காரணமாக அடிக்கடி அணியில் இருந்து நீக்கப்பட்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் முக்கிய கட்டத்தில் ஹசன் அலி ஒரு முக்கியமான கேட்சை தவறவிடுவார். அதன் காரணமாக பாகிஸ்தான் அந்த போட்டியில் தோல்வியைத் தழுவியுருக்கும். இதனால் அந்த நாட்டில் ஹசன் அலி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதன்பின்னர் அணியில் அவருக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டார். இதன் காரணமாக உள்ளூரில் நடக்கும் போட்டிகளில் ஹசன் அலி கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டியில் ஹசன் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது டி20 உலக கோப்பையில் ஹசன் அலி தவறவிட்ட கேட்ச்சை குறிப்பிட்டு வீரர் ஒரு சிலர் ஹசன் அலியை தொடர்ந்து கிண்டல் செய்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஹசன் அலி பார்வையாளர்கள் இடத்துக்கு சென்று கிண்டல் செய்தவரை தாக்கத் தொடங்கினார்.

அப்போது அங்கிருந்தவர்களும் ஹசன் அலியை தாக்கியுள்ளனர். பின்னர் காவலர்கள் வந்து ஹசன் அலியை அந்த இடத்தி இருந்து அழைத்துச்சென்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories