விளையாட்டு

ஓரங்கட்டப்படும் சூர்யகுமார் யாதவ்.. டிரெண்டாகி வரும் #Casteist_BCCI: இந்திய அணியில் நடப்பது என்ன?

வங்கதேசத் தொடரில் இந்திய அணியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டதை அடுத்து #Casteist_BCCI இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓரங்கட்டப்படும் சூர்யகுமார் யாதவ்..  டிரெண்டாகி வரும் #Casteist_BCCI: இந்திய அணியில் நடப்பது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோசமாக தோல்வியடைந்தது. இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதன் எதிரொலியாக, இந்திய அணியைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவைக் கூண்டோடு கலைத்து பிசிசிஐ அதிரடி காட்டியுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவில், சுனில் ஜோஷி (தெற்கு மண்டலம்), ஹர்விந்தர் சிங் (மத்திய மண்டலம்) மற்றும் தேபாஷிஷ் மொஹந்தி (கிழக்கு மண்டலம்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்கள் அனைவரும் தற்போது நீக்கப்பட்டுத் தேர்வு குழுவுக்கு புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நவம்பர் 28 வரை காலக்கெடு கொடுத்துள்ளது பிசிசிஐ. இதற்கிடையில் இந்திய அணி நியூசிலாந்து தொடர் விளையாடி வருகிறது. டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்றது. 2 போட்டிகள் மழையால் சமன் ஆனாலும் 1 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் டி20 கோப்பையை வென்றது.

ஓரங்கட்டப்படும் சூர்யகுமார் யாதவ்..  டிரெண்டாகி வரும் #Casteist_BCCI: இந்திய அணியில் நடப்பது என்ன?

மேலும் தவன் தலைமையில் ஒரு நாள் போட்டியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்த தொடரில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோருக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து தொடரை அடுத்து வங்கதேசத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் டி20 உலக கோப்பையில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த சூர்யகுமார் யாதவ் பெயர் இல்லாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சஞ்சு சாம்சன் பெயரும் இடம் பெறவில்லை.

ஓரங்கட்டப்படும் சூர்யகுமார் யாதவ்..  டிரெண்டாகி வரும் #Casteist_BCCI: இந்திய அணியில் நடப்பது என்ன?

தொடர்ச்சியாகச் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் அதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு ஆதரவாக இணையத்தில் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியில் வீரர்கள் தேர்வு செய்வதில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதாகத் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் தற்போது #Casteist_BCCI இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories