விளையாட்டு

பாலியல் குற்றச்சாட்டு.. இலங்கை வீரரை கைகழுவிய கிரிக்கெட் வாரியம்.. ஜாமின் மறுப்பால் சிறை செல்ல வாய்ப்பு !

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகா மீது இலங்கை கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு.. இலங்கை வீரரை கைகழுவிய கிரிக்கெட் வாரியம்.. ஜாமின் மறுப்பால் சிறை செல்ல வாய்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதல் தகுதி சுற்றின் முதல் போட்டியிலேயே நமீபியாவிடம் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

எனினும் அடுத்தடுத்த போட்டியில் வெற்றிபெற்று இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி சுற்றோடு நடையைக் கட்டியது. சூப்பர் 12 சுற்றில் இலங்கை அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறியது.

பாலியல் குற்றச்சாட்டு.. இலங்கை வீரரை கைகழுவிய கிரிக்கெட் வாரியம்.. ஜாமின் மறுப்பால் சிறை செல்ல வாய்ப்பு !

இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி போட்டியில் ஆடிய அந்த அணி அந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த போட்டி முடிந்ததற்கு பின்னர் இலங்கை அணி நாடு திருப்ப இருந்த நிலையில், பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவை ஆஸ்திரேலிய காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

இது தொடர்பான வெளியான தகவலின்படி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 29 வயது பெண்ணுடன் தனுஷ்கா டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகிய நிலையில், கடந்த வாரம் சிட்னியில் உள்ள குடியிருப்பில் அந்த பெண்ணை தனுஷ்க குணதிலகா சந்தித்துள்ளார். அப்போது அந்த பெண்ணை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் சிட்னி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு.. இலங்கை வீரரை கைகழுவிய கிரிக்கெட் வாரியம்.. ஜாமின் மறுப்பால் சிறை செல்ல வாய்ப்பு !

இந்த புகாரின் அடிப்படையில் தனுஷ்க குணதிலகா கைது செய்யப்பட்டதாக சிட்னி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது இலங்கை கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி குற்றச்சாட்டுக்கு ஆளான தனுஷ்க குணதிலகா அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்க தற்காலிக தடை விதித்துள்ளது.

மேலும், அவர் மீது குற்றம் உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. அதோடு இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கு அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த புகாரில் ஆளாகியுள்ள அவருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துள்ளது. இதனால் அவர் விரைவில் சிறை செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories