விளையாட்டு

பாபர் அசாம்,வில்லியம்சனிடம் இல்லாத இந்த திறன் இவரிடம் இருக்கிறது- விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய கம்பிர்!

விராட் கோலியை விமர்சித்து தள்ளிய இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் தற்போது புகழ்ந்துள்ளார்

பாபர் அசாம்,வில்லியம்சனிடம் இல்லாத இந்த திறன் இவரிடம் இருக்கிறது- விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய கம்பிர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட்டின் முகமாக கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலி மாறியுள்ளார். பல ஆண்டுகளாக சச்சின் எப்படி இந்திய அணியில் இருந்தாரோ அதேபோன்ற ஒரு வீரராக விராட் கோலி தற்போது திகழ்ந்து வருகிறார். சச்சினுக்கு வந்த அதே சறுக்கல் போலவே சில மாதங்களுக்கு முன்னர் விராட் கோலியின் நிலையும் இருந்தது.

சுமார் இரண்டு ஆண்டுகளாக விராட் கோலி சதம் அடிக்காத நிலையில், அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தற்போது நடந்துவரும் உலகக்கோப்பை தொடருக்கு விராட் கோலியை அணியில் எடுக்கவே கூடாது என்ற ரீதியிலும் சிலர் தொடர்ந்து கூறிவந்தனர். அப்படி கூறியவர்களுக்கு தற்போது விராட் கோலி பதிலடி கொடுத்து வருகிறார்.

பாபர் அசாம்,வில்லியம்சனிடம் இல்லாத இந்த திறன் இவரிடம் இருக்கிறது- விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய கம்பிர்!

கடந்த ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்த நிலையில் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த தொடரில் மீண்ட தனது பார்மை இந்த உலகக்கோப்பையில் தொடர்ந்து வருகிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்த நிலையில், இறுதி கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த கோலி இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார்.அந்த போட்டியில் அவர் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்திருந்தார்.

அடுத்ததாக நெதர்லாந்து அணியுடனான போட்டியிலும் சிறப்பாக ஆடிய கோலி அந்த போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இந்த போட்டியிலும் இந்திய அபார வெற்றி பெற்றது. பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மீண்டும் சிறப்பாக ஆடிய விராட் கோலி அந்த போட்டியில் 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.

பாபர் அசாம்,வில்லியம்சனிடம் இல்லாத இந்த திறன் இவரிடம் இருக்கிறது- விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய கம்பிர்!

இதில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின்மூலம் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார். மேலும் இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலிலும் முதல் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில், முன்னர் விராட் கோலியை விமர்சித்து தள்ளிய இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் விராட் கோலியை புகழ்ந்துள்ளார்

இது தொடர்பாக பேசிய அவர், "விராட் கோலி கடைசி பத்து ஓவரில் மிகச் சிறந்த அதிரடி ஆட்டக்காரராக விளையாடுகிறார், அதே சமயத்தில் முதல் 10 ஓவர்களில் அணியின் நிலைமைக்கு ஏற்றவாறு ஆங்கர் ரோல் செய்கிறார். அதீத திறமை இருந்தால் மட்டுமே இதனை செய்ய முடியும். ஆங்கர் ரோலிலும் அக்ரசிவ் ரோலிலும் இருக்கும் திறன் மிக குறைவான வீரர்களிடம் மட்டுமே உள்ளது. கேன் வில்லியம்சன், பாபர் ஆஸம், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரிடம் இது இல்லை. ஆனால் விராட் கோலிக்கு இந்த திறமை இருக்கிறது ” என்று பாராட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories