விளையாட்டு

"அணியின் எதிர்காலம் எப்படி என்றே தெரியவில்லை, வருத்தத்தில் உள்ளோம்"-மனம் திறந்த வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் !

அணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் கூறியுள்ளார்.

"அணியின் எதிர்காலம் எப்படி என்றே தெரியவில்லை, வருத்தத்தில் உள்ளோம்"-மனம் திறந்த வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தகுதி சுற்றில் இலங்கை,அயர்லாந்து, நெதர்லாந்து, ஜிம்பாப்பே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. 2 முறை சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி தகுதி சுற்றில் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறியது.

வெஸ்ட்இண்டீஸ் அணியின் இந்த தோல்வி கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது. சமீப ஆண்டுகளாக அந்த அணி சீராக விளையாடவில்லை என்றாலும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெரும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.

"அணியின் எதிர்காலம் எப்படி என்றே தெரியவில்லை, வருத்தத்தில் உள்ளோம்"-மனம் திறந்த வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் !

இந்த தோல்வியைத் தொடர்ந்து நவம்பர்-டிசம்பரில் நடக்கும் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரோடு வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக பில் சிமோன்ஸ் அறிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பதவியிலிருந்து நிக்கோலஸ் பூரன் விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து நிக்கோலஸ் பூரன் விளக்கம் அளித்துள்ளார். அதில், கேப்டன் பதவி குறித்து கடந்த சில மாதங்களாக யோசனை செய்து வருகிறேன். கிரிக்கெட் விளையாடுவது என் கனவு. இதற்கு முன்பும் மிகப்பெரிய சரிவைச் சந்தித்த நிலையில், இப்போது இன்னொரு சோதனை வந்துள்ளது. நான் சவால்களை எதிர்கொள்வதில் ஆர்வம் உள்ளவன். இந்த அனுபவங்களில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்வேன்'' என கூறியுள்ளார்.

"அணியின் எதிர்காலம் எப்படி என்றே தெரியவில்லை, வருத்தத்தில் உள்ளோம்"-மனம் திறந்த வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் !

மேலும் தோல்வி குறித்து பேசிய அவர், "அணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இப்போது தங்கள் திறமையை வளர்க்க அனைவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மனத்துக்குள் மிகுந்த வேதனையுடன் உள்ளோம். இந்த வேதனையை ஊக்கமாக்கிக்கொள்ள வேண்டும். வலுவான அணியாக மீண்டு வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories