விளையாட்டு

விராட் கோலியின் கையை முறுக்கினாரா கில்கிறிஸ்ட் ? -நடந்தது என்ன ? வெளிவந்த அதிர்ச்சி உண்மை !

விராட் கோலியை பார்த்து கில் கிறிஸ்ட் ஆக்ரோஷமாக நடந்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்காக காரணம் வெளிவந்துள்ளது.

விராட் கோலியின் கையை முறுக்கினாரா கில்கிறிஸ்ட் ? -நடந்தது என்ன ? வெளிவந்த அதிர்ச்சி உண்மை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் மோதியது.இதில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்து 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இந்திய அணி சார்பில் களமிறங்கிய முன்னணி பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

விராட் கோலியின் கையை முறுக்கினாரா கில்கிறிஸ்ட் ? -நடந்தது என்ன ? வெளிவந்த அதிர்ச்சி உண்மை !

இனி இந்திய அணி அவ்வளவுதான் என நினைக்கும்போதுதான் அந்த மாயம் நடந்தது. ஆட்டத்தின் 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 54 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்திருந்தது. 9 ஓவர்களில் 106 ரன்கள் எடுக்கவேண்டும். இந்த கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த கோலி இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார். அந்த போட்டியில் அவர் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்திருந்தார்.அதிலும் 19-வது ஓவரை வீசிய ஹாரிஸ் ராஃப்பின் 5-வது பந்தில் விராட் கோலி அடித்த சிக்ஸர் இப்போதுவரை பேசப்பட்டு கொண்டுள்ளது.

இந்த போட்டிக்கு பின்னர் நெதர்லாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி அந்த போட்டியிலும் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் விராட் கோலி 44 பந்துகளில் 62 ரன்களை குவித்து அசத்தினார். இந்த போட்டிக்கு முன்னர் விராட் கோலியை பார்த்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில் கிறிஸ்ட் ஆக்ரோஷமாக நடந்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

விராட் கோலியின் கையை முறுக்கினாரா கில்கிறிஸ்ட் ? -நடந்தது என்ன ? வெளிவந்த அதிர்ச்சி உண்மை !

அதாவது விராட் கோலி, தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயினிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற கில் கிறிஸ்ட் கத்திக்கொண்டே ஆக்ரோஷமாக விராட் கோலியிடம் கையை குலுக்கிவிட்டு சென்றார். இதை பார்ப்பதற்க்கு அவரின் கையை முறிப்பது போல தெரிந்தது.

இந்த நிலையில்ம தற்போது அதற்கான காரணம் வெளிவந்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் போட்டியில் ஹாரிஸ் ராஃப் வீசிய ஷார் லெந்த் பந்தை கோலி சிக்ஸருக்கு அடித்த அதிர்ச்சியில் இருந்து கில் கிறிஸ்ட் இன்னும் மீளவில்லை என்றும், இதனால் கோலியிடம் சென்று எப்படி இந்த ஷாட் ஆடினாய் என்று கேட்டு உற்சாகமாக கைக்குலுக்கிவிட்டு பாராட்டி சென்றுள்ளார்.

banner

Related Stories

Related Stories