விளையாட்டு

"இதற்கு எல்லாம் நாங்கள் காது கொடுப்பதில்லை".. பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவருக்கு அஷ்வின் பதிலடி!

இந்திய அணி பாகிஸ்தானை அதிகம் மதிக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் ரமீஸ் ராஸா.

"இதற்கு எல்லாம் நாங்கள் காது  கொடுப்பதில்லை".. பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவருக்கு  அஷ்வின் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடந்த 12 மாதங்களில் இந்திய அணியை இரண்டு முறை வீழ்த்தியிருக்கிறது பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி. அதனால் இந்திய அணி பாகிஸ்தானை அதிகம் மதிக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் ரமீஸ் ராஸா. அதுமட்டுமல்லாமல் பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய அணியை வீழ்த்தியதற்கு விமர்சகர்கள் இந்த பாகிஸ்தான் அணியைப் பாராட்டவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதற்கு இந்திய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் பதிலடியும் கொடுத்திருக்கிறார்.

கடந்த அக்டோபர் 2021 இந்த இரண்டு அணிகளும் மோதிய டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. அதற்கு முன்பு இந்த இரண்டு அணிகளும் உலகக் கோப்பை அரங்கில் 12 முறை மோதியிருந்தன. ஒருநாள் உலகக் கோப்பைகளில் 7 முறையும், டி20 உலகக் கோப்பையில் 5 முறையும் இவ்விரு அணிகளும் மோதியிருந்தன. இந்த 12 போட்டிகளில் ஒவ்வொரு முறையும் இந்தியாவே வென்றிருந்தது. உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற இந்தியாவின் சாதனை, கடந்த அக்டோபர் மாதம் உடைந்தது. அதுமட்டுமல்லாமல் கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 ஸ்டேஜிலும் இந்தியாவை வீழ்த்தியது அந்த அணி.

"இதற்கு எல்லாம் நாங்கள் காது  கொடுப்பதில்லை".. பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவருக்கு  அஷ்வின் பதிலடி!

வரும் அக்டோபர் 23ம் தேதி டி20 உலகக் கோப்பை போட்டியில் மீண்டும் இவ்விரு அணிகளும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரமீஸ் ராஸா, இந்தியாவுக்கு எதிரான ஒவ்வொரு போட்டியிலும் பாகிஸ்தான் அண்டர் டாக் ஆகவே போட்டியைத் தொடங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆனால் தற்போது இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியிருப்பதால், அந்த அணியை ரோஹித்தின் அணி அதிகம் மதிக்கும் என்றும் கூறினார். ஒரு பில்லியன் டாலர் டீமைத் தோற்கடித்ததற்கு விமர்சகர்களும் ரசிகர்களும் பாகிஸ்தானைப் பாராட்டவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார் அவர்.

"இதற்கு எல்லாம் நாங்கள் காது  கொடுப்பதில்லை".. பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவருக்கு  அஷ்வின் பதிலடி!

உலகக் கோப்பைக்கான பயிற்சியில் இருக்கும் இந்திய அணி பெர்த் மைதானத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார் இந்திய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின். அவரிடம் இதுபற்றிக் கேட்கப்பட்டதற்கு "நீங்கள் சொல்லித்தான் அவர் இப்படிப் பேசினார் என்பதே எனக்குத் தெரியும். ஆனால் இது கிரிக்கெட். நாங்கள் இந்த அரசியல் பிரச்சனைகளுக்கெல்லாம் அதிகம் காது கொடுப்பதில்லை. இந்த இரண்டு அணிகளுக்குமான ரைவல்ரி என்பது மிகவும் பெரியது. இரண்டு அணி ரசிகர்களுக்குமே இந்தப் போட்டி மிகவும் பெரியது. ஆனால் ஒரு போட்டியின் முடிவில் வெற்றி பெறுவதும் தோற்பதுமே ஒரு விளையாட்டு வீரருக்கு சகஜமான விஷயம். அதுவும் குறிப்பாக இந்த ஃபார்மட்டில் இரண்டு அணிகளுக்குமான இடைவெளி என்பது மிகவும் குறைவானது.அதுமட்டுமல்லாமல் இங்கு மரியாதை என்பது வெற்றியாலோ தோல்வியாலோ உருவாவது அல்ல. அது நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பொறுத்தது. நாங்கள் நிச்சயமாக பாகிஸ்தான் அணியை மதிக்கிறோம். அவர்களும் எங்களை மதிக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார் அஷ்வின்.

banner

Related Stories

Related Stories