விளையாட்டு

"பாகிஸ்தான் அணியே இந்த இரு வீரர்களைத்தான் நம்பி இருக்கிறது" - இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் கருத்து !

பாகிஸ்தான் அணி பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் ஆகிய இரு வீரர்களைத்தான் நம்பி இருக்கிறது என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

"பாகிஸ்தான் அணியே இந்த இரு வீரர்களைத்தான் நம்பி இருக்கிறது" - இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2022 ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்னும் சில தினங்களில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வியாழக்கிழமை ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுவிட்டது. முதல் போட்டியில் ரோஹித் ஷர்மாவின் அணி பாகிஸ்தானை சந்திக்கிறது. அந்தப் போட்டி அக்டோபர் 23ம் தேதி நடக்கிறது.

கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்த இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேருக்கு மோதின. அதில் இந்தியா ஒரு போட்டியிலும் பாகிஸ்தான் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றன. இந்நிலையில் அடுத்து இவ்விரு அணிகளும் மெல்போர்னில் மோதவிருக்கின்றன. கடந்த டி20 உலகக் கோப்பையில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இந்தியா, இம்முறை வெற்றிகரமாக உலகக் கோப்பையை தொடங்க காத்திருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக இரு அணிகளையும் ஒப்பீடு செய்திருக்கிறார் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர்.

"பாகிஸ்தான் அணியே இந்த இரு வீரர்களைத்தான் நம்பி இருக்கிறது" - இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் கருத்து !

ஒரு தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டியில், பாகிஸ்தான் அணி முழுக்க முழுக்க அவர்களின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையே நம்பியிருப்பதாகத் தெரிவித்தார். பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் போன்றவர்களே அந்த அணியின் நம்பிக்கையாக இருக்கும் நிலையில், இந்திய அணியில் குறைந்தபட்சம் 3 அல்லது 4 மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

"இந்திய அணி ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சில நல்ல போட்டிகளில் விளையாடியது. இந்தியா ஒரு முழுமையான அணி. ஒருசில தனிப்பட்ட வீரர்களை மட்டும் நம்பியே இந்த அணி இல்லை. பாகிஸ்தான் அணி தங்கள் பேட்டிங்கைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க அவர்களின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் ஆகியோரை மட்டுமே நம்பி இருக்கிறது. ஆனால் இந்திய அணியோ ஓரிரு வீரர்களை மட்டும் நம்பி இல்லை. நான்கு அல்லது ஐந்து மேட்ச் வின்னர்கள் அணியில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே மிகச் சிறந்த ஃபார்மிலும் இருக்கிறார்கள். பேட்டிங்கைப் பொறுத்தவரை இந்திய அணி மிகவும் சிறந்த நிலையில் இருக்கிறது" என்று இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியின்போது கூறினார் பங்கர்.

"பாகிஸ்தான் அணியே இந்த இரு வீரர்களைத்தான் நம்பி இருக்கிறது" - இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் கருத்து !

பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டரோ கடந்த சில வாரங்களாக பெரும் விமர்சனத்தைச் சந்தித்து வருகிறது. அதுவும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை அந்த அணி 4-3 என தோற்ற பிறகு பலரும் அந்த அணியின் மிடில் ஆர்டர் குறித்து கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

தற்போது நியூசிலாந்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக ஒரு முத்தரப்புத் தொடரில் பங்கேற்கிறது. அதேசமயம் இந்திய அணி ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டது.

banner

Related Stories

Related Stories