விளையாட்டு

விராட் கோலிக்காக ஒரே இரவில் ரூ.23000 செலவு செய்த ரசிகர்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

விராட் கோலியுடன் செல்ஃபி எடுப்பதற்காக அசாமைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரூ. 23000 செலவு செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

விராட் கோலிக்காக ஒரே இரவில் ரூ.23000 செலவு செய்த ரசிகர்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற 2வது டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் விராட் கோலி, கே.எல். ராகுல், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட நான்கு வீரர்களும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தனர்.

இந்நிலையில் அசாமைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விராட் கோலியுடன் செல்ஃபி எடுப்பதற்காக ரூ. 23 ஆயிரம் செலவு செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

விராட் கோலிக்காக ஒரே இரவில் ரூ.23000 செலவு செய்த ரசிகர்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல் ராய். இவர் விராட் கோலியின் தீவிர ரசிகர். மேலும் கடந்த 11 வருடங்களாக விராட் கோலியை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்க வேண்டும் என தொடர்ந்து முயச்சி செய்து வந்துள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை.

இதையடுத்து தென்னாப்பிரிக்காவுடனான 2வது டி20 போட்டியை விளையாடுவதற்காக இந்திய அணி கவுகாத்தி விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது அங்கு வந்த ராகுல் ராய் கோலியை சந்திக்க முயற்சி செய்தார்.

விராட் கோலிக்காக ஒரே இரவில் ரூ.23000 செலவு செய்த ரசிகர்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

ஆனால், பாதுகாப்பு அதிகம் இருந்ததால் அவரால் கோலியைச் சந்திக்க முடியவில்லை. பின்னர் வீரர்கள் பயிற்சி எடுக்கும் இடத்திற்குச் சென்று பார்த்துள்ளார். அங்கும் பாதுகாப்பு அதிகம் இருந்ததால் கோலியை, ராகுல் ராயால் நெருங்க முடியவில்லை.

இதையடுத்து வேறுவழியின்றி இந்திய அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ராகுல் ராய் ரூ.23000 செலவு செய்து அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். பின்னர் கோலியை சந்தித்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார். ரசிகரின் இந்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories