விளையாட்டு

"கோலியை கொண்டாடும்போது இவரையும் கொண்டாடுங்கள்.. சமமுக்கியத்துவம் கொடுங்கள்" - கவுதம் கம்பீர் ஆவேசம் !

விராட் கோலியை கொண்டாடம் நாம் இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்து வரும் புவனேஸ்வர் குமார் போன்ற வீரரின் ஐந்து விக்கெட்டை கொண்டாட மறந்து விட்டோம் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

"கோலியை கொண்டாடும்போது இவரையும் கொண்டாடுங்கள்.. சமமுக்கியத்துவம் கொடுங்கள்" - கவுதம் கம்பீர் ஆவேசம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த நிலையில், அடுத்த போட்டியில் இலங்கையிடமும் வீழ்ந்தது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடிக்க ஆப்கானிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. எனினும் பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் இந்தியா தோல்வியைத் தழுவியதால் இந்த தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.

"கோலியை கொண்டாடும்போது இவரையும் கொண்டாடுங்கள்.. சமமுக்கியத்துவம் கொடுங்கள்" - கவுதம் கம்பீர் ஆவேசம் !

அதேநேரம் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த தொடரில் விராட் கோலி இரண்டு அரை சதங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 122 ரன்கள் எடுத்து தான் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதை அறிவித்துள்ளார்.

இதே போட்டியில், இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் நான்கு ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். எனினும் விராட் கோலியின் இந்த சாதனையால் புவனேஸ்வர் குமாரின் சாதனை பெரிதாக பேசப்படவில்லை.

"கோலியை கொண்டாடும்போது இவரையும் கொண்டாடுங்கள்.. சமமுக்கியத்துவம் கொடுங்கள்" - கவுதம் கம்பீர் ஆவேசம் !

இந்த நிலையில், விராட் கோலியை கொண்டாடத் தெரிந்த நமக்கு மிகச் சிறிய கிராமத்தில் இருந்து வந்து இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்து வரும் புவனேஸ்வர் குமார் போன்ற வீரரின் ஐந்து விக்கெட்டை கொண்டாட மறந்து விட்டோம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "ஹீரோ போர்வையில் ஒளிந்திருக்கும் வீரர்களை கொண்டாடும் அதே நேரத்தில் இளம் வீரர்களின் மீதும் கவனத்தை செலுத்துங்கள். அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். அப்போதுதான் ஒட்டுமொத்த அணியாக இந்தியா சிறப்பாக இருக்கும்.

விராட் கோலியின் 100 இந்திய அணிக்கு முக்கியம் தான். அதே நேரம் புவனேஸ்வர் குமாரும் போற்றப்படக்கூடியவர் என்பதே எனது வாதம். ஏனெனில் புவனேஸ்வர் பற்றி ஓரிருவர் தவிர யாரும் பேசவில்லை. ஆனால் விராட் கோலியின் புகழை உலகமே பாடியது. இருவருக்கும் சம முக்கியத்துவம் கொடுங்கள் என்பது எனது கருத்து." எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories