தமிழ்நாடு

“அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்!” : தமிழர் திருநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

உலகத் தமிழர்களால் தை 1 அன்று தமிழர் திருநாள் பொங்கல் பெருமகிழ்வோடு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

“அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்!” : தமிழர் திருநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

உலகத் தமிழர்களால் தை 1 அன்று தமிழர் திருநாள் பொங்கல் பெருமகிழ்வோடு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில், நேற்றைய நாளும் (தை 1) தமிழ்நாடு உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் தைத் திருநாள் பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நாளின் நிறைவாக, தி.மு.கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை - மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு, சென்னை - நேதாஜி சாலை, நாராயணப்ப தெருவில் சாலையோரம் வசிக்கும் மக்களை சந்தித்து அவர்களின், தேவைகளை கேட்டறிந்தார்.

“அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்!” : தமிழர் திருநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

அப்போது, அங்கு வசிக்கும் மக்களும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கீடு செய்தமைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை - 3வது கடற்கரை சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் வசிக்கும் வீடற்றவர்களுக்கு பொங்கல் பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்து, அவர்கள் வசிப்பதற்கு வீடு ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்தார்.

இது குறித்து, தனது சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது,

“அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்!

உறவுகளைப் பிரிந்து, ஆதரவிழந்தோருக்கு அடைக்கலமாய், சென்னை மூன்றாவது கடற்கரைச் சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன்!

செல்லும் வழியில், நேதாஜி சாலை நாராயணப்பதெருவில் சாலையோரங்களில் வசிக்கும் வீடற்றோரைச் சந்தித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் அவர்களுக்குப் புதிய வீடுகளை வழங்கிட ஆணையிட்டுள்ளதைப் பகிர்ந்துகொண்டேன்!”

banner

Related Stories

Related Stories