விளையாட்டு

"விராட் கோலியை அவர் வழியில் விடுங்க,, டிஸ்டர்ப் செய்யாதீங்க" - BCCI-க்கு முன்னாள் வீரர் அறிவுரை !

டாப் ஆர்டரில் எந்த இடத்தில் விராட் கோலி பேட் செய்தாலும் எதிரணிக்கு கோலி அச்சுறுத்தலாக இருப்பார் என முன்னாள் வீரர் சபா கரீம் கூறியுள்ளார்.

"விராட் கோலியை அவர் வழியில் விடுங்க,, டிஸ்டர்ப் செய்யாதீங்க" - BCCI-க்கு முன்னாள் வீரர் அறிவுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்தது. அதில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த நிலையில், அடுத்த போட்டியில் இலங்கையிடமும் வீழ்ந்தது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடிக்க ஆப்கானிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. எனினும் பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் இந்தியா தோல்வியைத் தழுவியதால் இந்த தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.

"விராட் கோலியை அவர் வழியில் விடுங்க,, டிஸ்டர்ப் செய்யாதீங்க" - BCCI-க்கு முன்னாள் வீரர் அறிவுரை !

அதேநேரம் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த தொடரில் விராட் கோலி இரண்டு அரை சதங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 122 ரன்கள் எடுத்து தான் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதை அறிவித்துள்ளார்.

விராட் கோலியின் இந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு மிகவும் தேவையாக இருந்தது. இதைத் தொடர்ந்து பல முன்னணி வீரர்களும், முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் விராட் கோலிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

"விராட் கோலியை அவர் வழியில் விடுங்க,, டிஸ்டர்ப் செய்யாதீங்க" - BCCI-க்கு முன்னாள் வீரர் அறிவுரை !

இந்த நிலையில், விராட் கோலி குறித்து இந்திய முன்னாள் வீரர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது " முதல் சில பந்துகளில் ரன்-எ-பால் ஆடினாலும் கூட, விராட் கோலிக்கு ஆட்டத்தை முன்னோக்கி செல்லும் திறன் உள்ளது. எனவே இது இந்தியாவிற்கு சரியான அணுகுமுறையாகும். சிலர் பெரிய ஷாட்களுக்குச் செல்லும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு மற்றும் இன்னிங்ஸைக் கட்டுப்படுத்தும் ஒரு பேட்டர் உங்களுக்குத் தேவை. கோலி இதில் திறமை வாய்ந்தவர்.

டாப் ஆர்டரில் எந்த இடத்தில் பேட் செய்தாலும் எதிரணிக்கு கோலி அச்சுறுத்தலாக இருப்பார். எனவே கோலி, ரோஹித் மற்றும் ஹர்திக் போன்ற வீரர்களை டி20 உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட வைப்பதற்கு நிர்வாகம் பாதுகாப்பது முக்கியம். அவர் வழியில் செல்ல அவரை அனுமதிக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories