விளையாட்டு

"இந்திய அணி தினேஷ் கார்த்திக் குறித்து யோசிக்கவே கூடாது" - மூத்த வீரர் ராபின் உத்தப்பா கருத்து !

இந்திய அணி 6 ஆவது இடத்தில் தினேஷ் கார்த்திக்கைதான் இறக்க வேண்டும், அவரை உட்கார வைப்பது குறித்து யோசிக்கவே கூடாது என மூத்த வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

"இந்திய அணி தினேஷ் கார்த்திக் குறித்து யோசிக்கவே கூடாது" - மூத்த வீரர் ராபின் உத்தப்பா கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்தது. அதில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த நிலையில், அடுத்த போட்டியில் இலங்கையிடமும் வீழ்ந்தது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடிக்க ஆப்கானிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

எனினும் பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் இந்தியா தோல்வியைத் தழுவியதால் இந்த தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது. இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதற்கு முக்கியக் காரணம் இந்திய அணியின் பவுலிங் மற்றும் பின்வரிசை பேட்டிங்க்தான் காரணம் என விமர்சிக்கப்பட்டது.

"இந்திய அணி தினேஷ் கார்த்திக் குறித்து யோசிக்கவே கூடாது" - மூத்த வீரர் ராபின் உத்தப்பா கருத்து !

மேலும், அணி தேர்வு மிக மோசமாக இருந்ததாக கேப்டன் ரோஹித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். தினேஷ் கார்த்திக் இடத்தில் பந்த்தை இறங்கி அதில் இந்தியா பெரும் தோல்வியை சந்தித்தது.

மேலும், ஜடேஜா இடத்தில் இறங்கிய தீபக் ஹூடாவை இந்திய அணி சரியாக பயன்படுத்தவில்லை என விமர்சிக்கப்பட்டது. 4,5-வது வரிசையில் இறங்கும் தீபக் ஹூடாவை தினேஷ் கார்த்திக் இடத்தில் இறக்கியது இந்திய அணியின் வெற்றிவாய்ப்பை காலி செய்தது.

"இந்திய அணி தினேஷ் கார்த்திக் குறித்து யோசிக்கவே கூடாது" - மூத்த வீரர் ராபின் உத்தப்பா கருத்து !

இது குறித்து பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த வரிசையில், மூத்த வீரர் ராபின் உத்தப்பாவும் இணைந்துள்ளார். இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய அவர், அணி தேர்வில் ஏற்பட்ட தவறே இந்திய அணி தோல்விக்கு காரணம் என விமர்சித்துள்ளார்.

மேலும், தீபக் ஹூடாவைதான் 5 ஆவது இறக்க வேண்டும். கூடுதலாக அவருக்கு பந்துவீசும் ஆற்றலும் உள்ளது. 6 ஆவது இடத்தில் தினேஷ் கார்த்திக்தான். அவரை உட்கார வைப்பது குறித்து யோசிக்கவே கூடாது. அதை செய்யாதவறியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories