விளையாட்டு

ஆசிய கோப்பையில் இந்தியா இன்னும் வெளியேறவில்லை.. இது நடந்தால் இறுதிப்போட்டிக்கு சென்று விடலாம் !

இலங்கை அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னரும் இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

ஆசிய கோப்பையில் இந்தியா இன்னும் வெளியேறவில்லை.. இது நடந்தால் இறுதிப்போட்டிக்கு சென்று விடலாம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் துபாயில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின் குரூப் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. உலக கிரிக்கெட்டில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். எனினும் தொடர்ந்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - ரோகித் சர்மா நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின்னர் இறுதியில் ஜடேஜா,பாண்டியா அதிரடி ஆட்டம் காரணமாக 2 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்திய அணி திரில் வெற்றிபெற்றது.

ஆசிய கோப்பையில் இந்தியா இன்னும் வெளியேறவில்லை.. இது நடந்தால் இறுதிப்போட்டிக்கு சென்று விடலாம் !

பின்னர் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் துவக்க வீரர் கே.எல்.ராகுல் டி20-யில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்.அந்த போட்டியில் சூரியகுமார் யாதவின் ஆட்டத்தால் இந்திய அணி பெரிய இலக்கை எட்டி ஹாங்காங் அணியை வீழ்த்தியது.

அதைத் தொடர்ந்து சூப்பர் 4 பிரிவில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் இலக்கை கடந்து திரில் வெற்றியை பெற்றது.

ஆசிய கோப்பையில் இந்தியா இன்னும் வெளியேறவில்லை.. இது நடந்தால் இறுதிப்போட்டிக்கு சென்று விடலாம் !

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

கேப்டன் ரோகித் மட்டும் 72 ரன்கள் குவித்த நிலையில் 20 ஓவர்களில் இந்திய அணி 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி ஒரு பந்து எஞ்சிய நிலையில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றை ஏறக்குறைய உறுதி செய்தது.

இந்த போட்டியில் இந்தியா தோற்றதால் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்பட்டாலும் இன்னும் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணிக்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அதற்கு மற்ற அணிகளின் முடிவினை சார்ந்து இருக்க வேண்டும்.

ஆசிய கோப்பையில் இந்தியா இன்னும் வெளியேறவில்லை.. இது நடந்தால் இறுதிப்போட்டிக்கு சென்று விடலாம் !

அடுத்த ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற வேண்டும். அப்படியில்லாமல் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும்.

ஆனால் இது மட்டும் போதாது, இந்திய அணி தனது இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிக பெரிய வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். பின்னர் கடைசியாக நடைபெறும் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான நிலையில் தோல்வியை சந்திக்க வேண்டும்.

இந்த தொடரில் பாகிஸ்தான் அணி மிக வலுவான நிலையில் இருக்கும் நிலையில், இந்த நிகழ்வுகள் நடக்க பெரும்பாலும் வாய்ப்பில்லாத நிலையில், இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

banner

Related Stories

Related Stories