விளையாட்டு

ஓய்வு முடிவை அறிவித்த நியூசிலாந்து ஆல் ரவுண்டர் -கோரிக்கையை கிரிக்கெட் வாரியம் புறக்கணித்ததால் முடிவு !

நியூசிலாந்து ஆல் ரவுண்டர் காலின் டி கிராந்தோம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.

ஓய்வு முடிவை அறிவித்த நியூசிலாந்து ஆல் ரவுண்டர் -கோரிக்கையை கிரிக்கெட் வாரியம் புறக்கணித்ததால் முடிவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நியூசிலாந்து ஆல் ரவுண்டர் காலின் டி கிராந்தோம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். அவரின் முடிவுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் கூறியிருக்கிறார் அவர். இந்த வாரம் நியூசிலாந்து கிரிக்கெட் சங்கத்திடம் கலந்துரையாடிய அவர், தன்னை வருட ஒப்பந்தத்தில் இருந்து விலக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்கள் ஒப்புக்கொண்டதால், அதன்பிறகு இந்த முடிவை அறிவித்திருக்கிறார் டி கிராந்தோம்.

"நான் இனி இளைஞன் ஆகப் போவதில்லை என்பதை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். பயிற்சிகள் மேலும் மேலும் கடினமாகிக்கொண்டே செல்கின்றன. அதுவும் இல்லாமல் காயங்களும் அடிக்கடி கஷ்டப்படுத்துகிறது" என்று கூறினார் டி கிராந்தோம்.

"வளர்ந்து வரும் ஒரு குடும்பமும் எனக்கு இருக்கிறது. கிரிக்கெட்டுக்குப் பிறகான என் எதிர்காலம் என்ன என்பதையும் புரிந்துகொள்ள நான் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடிய பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. 2012ம் ஆண்டில் இருந்து இப்போது வரை சர்வதேச அரங்கில் பிளாக் கேப்ஸ் அணிக்காக விளையாடிக்கொண்டிருக்கிறேன். இது மிகவும் பெருமையான விஷயம். ஆனால் இது அதை முடிவுக்குக் கொண்டு வர சரியான தருணம் என்று நினைக்கிறேன்" என்றும் கூறினார் அவர்.

ஓய்வு முடிவை அறிவித்த நியூசிலாந்து ஆல் ரவுண்டர் -கோரிக்கையை கிரிக்கெட் வாரியம் புறக்கணித்ததால் முடிவு !

நியூசிலாந்து அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய காலின் டி கிராந்தோம் 1432 ரன்கள் எடுத்திருக்கிறார். அவருடைய சராசரி 38.70. வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் சதங்கள் அடித்திருக்கிறார். பந்துவீச்சிலும் நல்ல பங்களிப்பைக் கொடுத்த அவர் 49 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். அவருடைய பௌலிங் சராசரி 32.95. பாகிஸ்தான் அணிக்கு எதிராக தன்னுடைய அறிமுக போட்டியிலேயே 41 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்தார் அவர். அவருடைய சிறப்பான பந்துவீச்சாக அது பதிவாகியிருக்கிறது.

டெஸ்ட் அரங்கில் அவர் விளையாடிய போட்டிகளில் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. அந்த 29 டெஸ்ட் போட்டிகளில் 18 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கிறது. முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு இவர் ஒரு முக்கியக் காரணமாக இருந்தார். சௌதாம்ப்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி முதல் சாம்பியனாக மகுடம் சூடியது நியூசிலாந்து அணி.

ஓய்வு முடிவை அறிவித்த நியூசிலாந்து ஆல் ரவுண்டர் -கோரிக்கையை கிரிக்கெட் வாரியம் புறக்கணித்ததால் முடிவு !

நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார் டி கிராந்தோம். 45 போட்டிகளில் விளையாடிய அவர் 742 ரன்கள் எடுத்திருக்கிறார். அதுவும் 106.15 என்ற சிறப்பான ஸ்டிரைக் ரேட்டில் ரன் குவித்திருக்கிறார். பந்துவீச்சில் 41 என்ற சராசரியில் 30 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் அவர். அவர் விளையாடிய காலகட்டத்தில் நியூசிலாந்து அணி சர்வதேச ரேங்கிங்கில் முதலிடத்துக்கு முன்னேறியது. மேலும் இங்கிலாந்தில் நடந்த 2019 உலகக் கோப்பையில் அந்த அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது.

"கடந்த 10 ஆண்டுகளாக இந்த அணியின் அங்கமாக இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த அணியோடு, வீரர்களோடு பல சிறப்பான தருணங்களைப் பகிர்ந்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான தருணம். என் அணியினரோடு, பயிற்சியாளர்களோடு, எதிரணி வீரர்களோடு பல நீண்ட கால நட்புகளை உறுவாக்கிக்கொண்டிருக்கிறேன். இந்த நினைவுகளை காலா காலத்துக்கும் பாதுகாப்பேன்" என்று கூறியிருக்கிறார் காலின் டி கிராந்தோம்.

banner

Related Stories

Related Stories