விளையாட்டு

"நரகம் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் உணரவேண்டும்" -எதிரணி குறித்து விராட் கோலி கருத்து? நடந்தது என்ன ?

இந்திய வேகப்பந்துவீச்சு யூனிட்டை உலகின் மிகச் சிறந்த ஒன்றாக மாற்றியிருக்கிறார் கோலி என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

"நரகம் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் உணரவேண்டும்" -எதிரணி குறித்து விராட் கோலி கருத்து? நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய பட்டோடி டிராபி டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இருந்தாலும் அந்தத் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. விராட் கோலியின் தலைமையில் விளையாடியபோது இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றிருந்தது. அப்போது இந்திய அணி விளையாடிய விதம் கோலியின் தலைமையில் இந்திய அணி எப்படி டெஸ்ட் போட்டிகளை அணுகுகிறது என்பதைப் புரியவைத்தது. கோலியின் தலைமையிலான இந்திய அணி மிகவும் ஆக்ரோஷமாக, எந்த சூழ்நிலையிலும் எதையும் எதிர்க்கத் தயாராக இருந்தது. அந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற ஒரு போட்டியைப் பற்றிப் பேசிய தினேஷ் கார்த்திக், சில தருணங்களை நினைவு படுத்திக் கூறியிருக்கிறார்.

"அந்தத் தொடரின்போது விராட் கோலி மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் சொன்னார். அது போட்டி முடிந்ததும் நடந்த பரிசளிப்பு என்று நினைக்கிறேன். அதில், 'இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கிரீஸில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் நரகம் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் உணரவேண்டும் என்று நான் நினைத்தேன்' என்று கூறினார். அவர் சொன்னபடி தான் அந்தப் போட்டியில் இந்திய அணி செயல்பட்டது. அந்த 50 ஓவர்கள் இங்கிலாந்து அணி உச்சபட்ச நெருக்கடியை உணர்ந்தது" என்று அந்த நிகழ்வை நினைவு கூர்ந்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

"நரகம் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் உணரவேண்டும்" -எதிரணி குறித்து விராட் கோலி கருத்து? நடந்தது என்ன ?

"அந்த ஆடுகளம் முதல் இன்னிங்ஸை விட கொஞ்சம் சிறப்பாகவே இருந்தது. பேட்டிங் செய்வது கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நன்றாகவே பேட்டிங் செய்திருக்கவேண்டும். ஆனால் அவர்கள் தடுமாறினார்கள். நெருக்கடி அதைத்தான் செய்யும். சொல்லப்போனால் அது இந்திய வீரர்கள் கொடுத்த உளவியல் நெருக்கடி தான். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் மோசமான அணுகுமுறை, இங்கிலாந்து டெய்ல் எண்டர்களுக்கு இந்தியா வைத்திருந்த ஃபீல்ட் செட் அப் எல்லாமும் சேர்ந்து அந்த அணியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

கோலி எப்போதுமே அதீத உற்சாகத்தோடு இருப்பார். சில சமயங்களில் டீம் huddleல் அவர் சொல்லும் விஷயங்கள் உங்களுக்குள் ஒரு தீப்பொறியை கிளப்பிவிடும். அந்த huddle மிகவும் சிறப்பான ஒரு இடம். அப்படி வீரர்களை பயங்கரமாக உற்சாகப்படுத்தும் சில சிறப்பான தருணங்களில் நான் இருந்திருக்கேன். அவர் அந்தப் போட்டியில் அந்த 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தவேண்டும் என்பதுதான் அவரது இலக்காக இருந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அது அவருக்கு 50 ஓவர்களிலேயே கிடைத்தது. அது அவருடைய மிகச் சிறந்த டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

"நரகம் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் உணரவேண்டும்" -எதிரணி குறித்து விராட் கோலி கருத்து? நடந்தது என்ன ?

இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன்களில் நிச்சயமாக அவரும் ஒருவர். ஏனெனில் வெளிநாட்டு ஆடுகளங்களில் இந்திய அணிக்கு பல நல்ல முடிவுகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அவரது கேப்டன்சியில் எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கிடவேண்டும். ஏனெனில், அது நாம் முன்பு அதிகம் பார்த்திடாத ஒன்று. மற்றவர்களை விட வேகப்பந்துவீச்சாளர்களுக்கான சிறந்த கேப்டன் அவர் என்று கண்டிப்பாக சொல்லவேண்டும். உங்கள் அணியில் அஷ்வின், ஜடேஜா இருவரும் இருக்கும்போது பெரிதாக எதுவும் செய்யத் தேவையில்லை. ஆனால் வேகப்பந்துவீச்சு அப்படியில்லை. இந்திய வேகப்பந்துவீச்சு யூனிட்டை உலகின் மிகச் சிறந்த ஒன்றாக மாற்றியிருக்கிறார் கோலி" என்றும் கூறினார் தினேஷ் காத்திக்.

banner

Related Stories

Related Stories