விளையாட்டு

கார்ல்சனிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய கூட்டம்.. கூலாக நின்று வேடிக்கை பார்த்த பிரக்ஞானந்தா: வைரல் படம்!

அமெரிக்காவில் நடந்த கிரிப்டோ கோப்பை செஸ் போட்டியில் கேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா 2வது இடம் பிடித்தார்.

கார்ல்சனிடம் ஆட்டோகிராஃப்  வாங்கிய கூட்டம்.. கூலாக நின்று வேடிக்கை பார்த்த பிரக்ஞானந்தா: வைரல் படம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவில் கிரிப்டோ கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. இதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா உட்பட 8 முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் 7வது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா.

இந்த சுற்றில் 4 ரேப்பிட் ஆட்டங்கள் முடிவில் இருவரும் 2 -2 என புள்ளிகளைப் பெற்றதால் ஆட்டம் டை பிரக்கில் முடிந்தது. இருப்பினும் மொத்த புள்ளிகள் அடிப்படையில் 16 பள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

கார்ல்சனிடம் ஆட்டோகிராஃப்  வாங்கிய கூட்டம்.. கூலாக நின்று வேடிக்கை பார்த்த பிரக்ஞானந்தா: வைரல் படம்!

15 புள்ளிகள் பெற்று தமிழக வீரர் பிரக்ஞானந்தா 2வது இடம் பிடித்தார். இந்த ஆண்டில் மட்டும் 3 முறை மேக்னஸ் கார்ல்சனை, பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரக்யானந்தா தனது பயிற்சியாளருடன் தனியாக நிற்கையில், எதிரில் கார்ல்சனிடம் ரசிகர்கள் ஆட்டோகிராஃப் வாங்கும் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக சாம்பியனை 3 முறை வீழ்த்தியவருக்குக் கொடுக்கும் மரியாதை இதுதான் என பலர் விமர்சித்து வருகின்றனர்.

கார்ல்சனிடம் ஆட்டோகிராஃப்  வாங்கிய கூட்டம்.. கூலாக நின்று வேடிக்கை பார்த்த பிரக்ஞானந்தா: வைரல் படம்!

மேலும், இது எல்லாம் பிரக்யானந்தாவுக்கு ஒரு பிரச்சனையே இல்லை. இதே ரசிகர்கள் அடுத்த சில ஆண்டுகளிலேயே இவரின் ஆட்டோகிராஃப் வாங்க வரிசையில் காத்துக் கொண்டிருப்பார்கள் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories