விளையாட்டு

'இதை செய்தால்தான் இந்திய அணியில் தொடர முடியும்'.. இஷன் கிஷனுக்கு ஆலோசனை கூறும் முன்னாள் வீரர்!

கே.எல் ராகுல் போன்ற ஒரு அனுபவ சீனியர் வீரருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் இஷனுக்குக் கிடைக்கப்போவதில்லை என முன்னாள் வீரர் ஆர்.பி சிங் தெரிவித்துள்ளார்.

'இதை செய்தால்தான்  இந்திய அணியில் தொடர முடியும்'.. இஷன் கிஷனுக்கு ஆலோசனை கூறும் முன்னாள் வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது பல வீரர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். சீனியர் வீரர்கள் ஓய்வு எடுப்பது பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளைக் கொடுக்கிறது. அதனால் இந்திய அணியில் இடம்பெற பெரும் போட்டி நிலவுகிறது. காயத்திலிருந்து கே.எல். ராகுல் மீண்டும் திரும்பியிருப்பது டாப் 3 இடங்களுக்கான போட்டியை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இளம் வீரர் இஷன் கிஷன் இன்னும் முழு ஃபார்முக்கு தடுமாறுகிறார். அந்த அணிக்கு எதிராக சனிக்கிழமை நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இஷன் கிஷனுக்கு வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் அவர் அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவார். இந்நிலையில், தனக்குக் கிடைக்கும் வாய்ப்பை முழுமையாக இஷன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர்.பி சிங். கே.எல் ராகுல் போன்ற ஒரு அனுபவ சீனியர் வீரருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் இஷனுக்குக் கிடைக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

'இதை செய்தால்தான்  இந்திய அணியில் தொடர முடியும்'.. இஷன் கிஷனுக்கு ஆலோசனை கூறும் முன்னாள் வீரர்!

"இஷன் கிஷன், கே.எல் ராகுல் இருவருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இஷன் கிஷன் இளம் வீரர். ராகுல் அப்படி இல்லை. அதனால் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை இஷன் கிஷன் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இது அவருக்குக் கிடைத்திருக்கும் ஒரு முக்கியமான வாய்ப்பு" என்று சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார் ஆர்பி சிங்.

"கேஎல் ராகுல் ஒரு சீனியர் வீரர். தன்னுடைய திறமையை அவர் நிரூபித்துவிட்டார். அவருடைய கேம் டெக்னிக் அபாரமானது. பல சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடிவிட்டு வந்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அவர் இப்போது இந்திய அணியின் கேப்டனும் கூட. இஷன் கிஷனுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காது என்று சொல்ல வரவில்லை. அவருக்கு நிச்சயம் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வாய்ப்புகள் குறைந்துவிடும்" என்று கூறியிருக்கிறார் அவர்.

'இதை செய்தால்தான்  இந்திய அணியில் தொடர முடியும்'.. இஷன் கிஷனுக்கு ஆலோசனை கூறும் முன்னாள் வீரர்!

இஷன் கிஷன், சுப்மன் கில் இருவரும் இணைந்து ஜோடியாக 36 ரன்கள் எடுத்தனர். ஆனால் அவர்கள் இருவருமே லூக் யாங்வேயின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அது இந்திய அணியை இக்கட்டான கட்டத்தில் தள்ளியது. ஆனால் சஞ்சு சாம்சன் (43*) மற்றும் தீபக் ஹூடா (25) இருவரும் இணைந்து 56 ரன்கள் எடுக்க இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா வெற்றி பெறுவதற்கு சில நிமிடங்கள் முன்பு தீபக் ஹூடா ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு 162 ரன்கள் தான் தேவைப்பட்டது. ஒரு எளிதான இலக்கை சேஸ் செய்யும்போதே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. அதனால் அதிக நேரம் களத்தில் இருப்பது, மற்ற வீரர்களோடு சேர்ந்து பெரிய பார்ட்னர்ஷிப் அமைப்பது போன்றவற்றில் ஆர்பி சிங் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று கூறியிருக்கிறார் ஆர்பி சிங்.

"இதுபோன்ற போட்டிகளில் நீங்கள் பெரிய ஸ்கோர் எடுக்கவேண்டும். ஒரு போட்டியை வெல்லக்கூடிய ஒரு இன்னிங்ஸை ஆடவேண்டும். இந்தப் போட்டியில் அதற்கான வாய்ப்பு இருந்தது. ஏனெனில் அவ்வளவு பெரிய ஸ்கோரை ஒன்றும் இந்திய அணி சேஸ் செய்யவில்லை. ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தால் தான் ஒரு நல்ல அடித்தளம் அமைக்க முடியும். ஆனால் அவரால் அதையே செய்ய முடியவில்லை.

பேட்டிங் செய்ய வந்தபோது அவர் நல்ல டச்சில் இல்லை. அது அவருடைய உடல் மொழியிலேயே தெரிந்தது. மிகவும் தடுமாறினார். அது டிரைவ் ஆடக்கூடிய ஒரு பந்து. ஆனால் அதை அவரால் சரியாக எட்ட முடியவில்லை. அதனால்தான் இன்சைட் எட்ஜ் ஆனது. அவர் ஒரு நல்ல பேட்ஸ்மேன் தான். ஆனால் ஆட்டம் பற்றிய புரிதல் சரியாக இருக்கவேண்டும்" என்று கூறினார் ஆர்.பி சிங்.

banner

Related Stories

Related Stories