விளையாட்டு

"விராட் கோலி இடத்தில் பாபர் அசாம்,ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட யாரும் இல்லை" - புகழ்ந்து தள்ளிய ஷேன் வாட்சன் !

மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும்போது விராட் கோலி அளவுக்கு அவர் பௌலர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது இல்லை என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

"விராட் கோலி இடத்தில் பாபர் அசாம்,ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட யாரும் இல்லை" - புகழ்ந்து தள்ளிய ஷேன் வாட்சன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட்டில் Fab Four என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுவந்தது. மிகச் சிறப்பாக விளையாடி சாதனைகளாகப் படைத்துக்கொண்டிருந்த விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் ஆகியோரை தொடர்ந்து ஓப்பீடு செய்துகொண்டிருந்தனர். இப்போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் தன்னுடைய அசத்தலான பேட்டிங்கால் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்.

அதனால் அவர் ஒரு வீரருக்குப் பதிலாக Fab Four வரிசையில் இடம்பெறவேண்டுமா என்ற விவாதம் வலுத்திருக்கிறது. சிலர் அவரையும் சேர்த்து Fab Five என்று அழைக்கலாம் என்ற விவாதமும் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் யார் சிறந்தவர்கள் என்ற சமூக வலைதள சண்டைகளும் அதிகரித்துவிட்டன. இந்நிலையில் இந்த 5 பேட்ஸ்மேன்களில் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் யார் என்ற முடிவுக்கு வருவது மிகவும் கடினம் என்று கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன்.

"விராட் கோலி இடத்தில் பாபர் அசாம்,ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட யாரும் இல்லை" - புகழ்ந்து தள்ளிய ஷேன் வாட்சன் !

முன்னாள் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி சமீப காலமாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறுகிறார். சர்வதேச போட்டிகளில் அவர் சதமடித்து ஆயிரம் நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி வங்கதேச அணிக்கு எதிராக ஈடன் கார்டனில் நடந்த பகல் இரவு போட்டியில் சதமடித்திருந்தா கோலி. அதன்பிறகு அவர் சதமே அடிக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில் ஆறு அரைசதங்கள் உள்பட 872 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் கோலி. இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் கோலி தான் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று கூறியிருக்கிறார் வாட்சன். முன்னாள் இங்கிலாந்து வீராங்கனை ஈஷா குஹாவுடனான உரையாடலில் இதைத் தெரிவித்திருக்கிறார் அவர்.

"எப்போது கேட்டாலும் நான் விராட் கோலி என்ற பதிலைத் தான் சொல்லப் போகிறேன். அவர் அந்த அளவுக்கு அனைத்து ஃபார்மட்களிலும் சிறப்பாக விளையாடியிருக்கிறார். இந்திய அணிக்காக ஒவ்வொரு முறை களத்தில் இறங்கியபோதும் அவர் தன்னுடைய 100 சதவிகித உழைப்பையும் கொடுத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னைப் பொறுத்தவரை விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன்.

"விராட் கோலி இடத்தில் பாபர் அசாம்,ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட யாரும் இல்லை" - புகழ்ந்து தள்ளிய ஷேன் வாட்சன் !

"ஸ்டீவ் ஸ்மித் அவருக்கு அருகில் இருந்தார். என்ன, அவர் தன்னுடைய மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும்போது விராட் கோலி அளவுக்கு அவர் பௌலர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது இல்லை. அதனால் அந்தப் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் சற்று சறுக்கிவிட்டார். பாபர் ஆசம் தற்போது மிகவும் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய ஆட்டத்தை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்றது போல் மாற்றிக் கொண்டிருக்கிறார். அதனால் பாபர் ஆசமுக்கு நான் இரண்டாம் இடம் கொடுப்பேன்" என்று கூறியிருக்கிறார் ஷேன் வாட்சன்.

"கேன் வில்லியம்சன் சமீப காலமாக முழங்கை காயத்தால் பெரிதும் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படி விளையாடவேண்டும் என்பதும், பௌலர்களுக்கு எப்படி நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்பதும் நன்கு தெரியும். அதேபோல் ஜோ ரூட் சமீப காலமாக மிகச் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருக்கிறார். இந்த உலகத் தர வீரர்கள் தற்போது இருக்கும் சூழ்நிலை எனக்குப் புரியவில்லை. மிகப் பெரிய சதங்கள் அடிக்கவில்லை என்றாலும் 70, 80 ரன்கள் அடித்து ஆட்டத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இவர்களால் அவர்கள் முன்பு உருவாக்கி வைத்திருந்த அந்த தரத்தில் அவர்களால் தொடர்ந்து செயல்பட முடிவதில்லை என்பதுதான் பிரச்சனை" என்று கூறியிருக்கிறார் வாட்சன்.

banner

Related Stories

Related Stories