விளையாட்டு

"ரன் அவுட் ஆகி அழுதுகொண்டே வந்தேன்" -முதல் போட்டி குறித்த அனுபவத்தை பகிர்ந்த சச்சின் !

முதல் போட்டியில் ரன் அவுட் ஆகி அழுதுகொண்டே பெவிலியன் வந்தேன் என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

"ரன் அவுட் ஆகி அழுதுகொண்டே வந்தேன்" -முதல் போட்டி குறித்த அனுபவத்தை பகிர்ந்த சச்சின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றவர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர்தான். 16 வயதில் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் அதன் பின்னர் செய்தது எல்லாம் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டியது.

அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக போட்டிகள் என கிரிக்கெட்டின் பல்வேறு சாதனைகளுக்கு அவரே சொந்தக்காரர். அதோடு ஒரு நாள் போட்டியில் 200 அடிக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், முதல் ஆளாக அதை கடந்து அனைத்தும் முடியும் என்று நிரூபித்தார்.

"ரன் அவுட் ஆகி அழுதுகொண்டே வந்தேன்" -முதல் போட்டி குறித்த அனுபவத்தை பகிர்ந்த சச்சின் !

இத்தகைய சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவர், ரன்அவுட் ஆகி அழுதுகொண்டே சென்றுள்ளேன் என்று கூறியுள்ளார். ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சச்சின், அதில் 15 வயதுக்குட்பட்டோர் அணியில் தான் விளையாடிய அனுபவம் குறித்து சச்சின் பேசியுள்ளார். "புனேவில் ஏக்கம் நிறைந்த தருணம் " என தலைப்பிட்டு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் , "மும்பையின் 15 வயதுக்குட்பட்டோர் அணியில் தான் முதன் முதலாக ஆடிய போது, நண்பர் ராகுல் ஒரு ஆப் டிரைவ் அடித்து மூன்றாவது ரன் எடுக்கலாம் என கூறினார். அப்போது நான் வேகமாக ஓடக்கூடியவன் அல்ல. அந்த போட்டியில் நான் 4 ரன்கள் எடுத்த நிலையில் நான் ரன் அவுட் ஆனேன். அந்த ரன் அவுட் என் நினைவில் இன்னும் உள்ளது.

அவுட் ஆன பிறகு பெவிலியன் வரை அழுதது எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இது எனது முதல் போட்டி, நான் பெரிய ரன்களை எடுக்க விரும்பினேன், ஆனால் அது நடக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories