விளையாட்டு

“இடைவெளி இல்லாமல் செல்லும் ஒருநாள் போட்டி” : ICC அட்டவணையால் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்ஸ்!

டி20 உலகக் கோப்பை இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கவிருக்கும் நிலையில், பென் ஸ்டோக்ஸின் ஓய்வு ஒருநாள் போட்டிகளின் நிலை குறித்து மிகப்பெரிய கேள்வியை எழுப்பியது.

“இடைவெளி இல்லாமல் செல்லும் ஒருநாள் போட்டி” : ICC அட்டவணையால் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் சென்றுகொண்டிருக்கும் சர்வதேச கிரிக்கெட் அட்டவணை கடந்த சில மாதங்களாக பெரும் விமர்சனத்தை சந்தித்துவருகிறது. இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அந்த விமர்சனங்கள் அதிகரித்துவருகின்றன.

இந்நிலையில் பல முன்னாள் வீரர்களும் ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் பற்றி கேள்வி எழுப்பியிருக்கின்றனர். தொடர்ந்து போட்டிகளில் விளையாடிக்கொண்டிருப்பது வீரர்களின் நலனுக்கு ஏற்றது அல்ல என்றும் பலர் கூறியிருக்கின்றனர். பென் ஸ்டோக்ஸின் ஓய்வு முடிவை தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறியிருக்கிறார் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம்.

“இடைவெளி இல்லாமல் செல்லும் ஒருநாள் போட்டி” : ICC அட்டவணையால் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்ஸ்!

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் சர்வதேச கிரிக்கெட் அட்டவணையை கடுமையாக சாடியிருக்கிறார். தற்போது இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருக்கும் பென் ஸ்டோக்ஸ், மூன்று ஃபார்மட்களிலும் தொடர்ந்து விளையாடுவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறித்தான் ஓய்வு முடிவை அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்கள் ஒன்றும் கார் இல்லை என்றும், மிகவும் அதிகமான போட்டிகள் தொடர்ந்து திட்டமிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். டி20 உலகக் கோப்பை இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கவிருக்கும் நிலையில், பென் ஸ்டோக்ஸின் ஓய்வு ஒருநாள் போட்டிகளின் நிலை குறித்து மிகப்பெரிய கேள்வியை எழுப்பியது.

“இடைவெளி இல்லாமல் செல்லும் ஒருநாள் போட்டி” : ICC அட்டவணையால் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்ஸ்!

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் எதிர்காலம் குறித்து கேட்கப்பட்டபோது, இடைவெளி இல்லாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டே இருப்பது ஒருநாள் போட்டிகளின் முடிவுக்கு வழிவகுக்கலாம் என்று கூறினார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி.

"ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன என்பதை உணர முடிகிறது. ஆனால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்றே தோன்றுகிறது. 50 ஓவர் போட்டிகளின்மீது முன்பு இருந்த எதிர்பார்ப்பும் ஆர்வமும் இப்போது நிச்சயமாக இல்லை.

2019ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியை வென்றது மிகவும் கடினமாக ஒன்றாக இருந்தது. ஏனெனில் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்தப் போட்டிகளை யாரும் விளையாட விரும்பமாட்டார்கள்" என்று சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் மொயீன் அலி.

“இடைவெளி இல்லாமல் செல்லும் ஒருநாள் போட்டி” : ICC அட்டவணையால் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்ஸ்!

"இது இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட்டில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையைப் போலத்தான். 50 ஓவர் போட்டிகள் நடந்துகொண்டிருக்கும்போது 'தி 100' தொடங்கிவிட்டது. கவுன்ட்டி சாம்பியன்ஷிப், விடாலிடி பிளாஸ்ட், தி 100 தொடர்களுக்கு இருக்கும் ஆர்வம் நிச்சயமாக 50 ஓவர்கள் போட்டிகளுக்கு இல்லை" என்றும் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

"மூன்று ஃபார்மட்களிலும் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதுதான் மிகவும் சிறந்த உணர்வு. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் சமீப காலமாக அளவு கடந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து வீரர்களால் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட முடியாது. அதனால்தான் இப்போது பல முன்னணி வீரர்கள் ஓய்வு பெறுவதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். வீரர்கள் ஓய்வு பெறுவது இனி வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும்.

“இடைவெளி இல்லாமல் செல்லும் ஒருநாள் போட்டி” : ICC அட்டவணையால் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்ஸ்!

இப்போதைய சூழ்நிலையில் ஒருநாள் போட்டிகளில் வெகு காலம் நிலைத்திருக்காது என்பது என்னுடைய கருத்து. இன்னும் சில ஆண்டுகளில் அதை நாம் இழந்துவிடுவோமோ என்று நான் அஞ்சுகிறேன். ஏனெனில் இதுதான் இப்போதைக்கு சலிப்படையச் செய்யும் மிகப்பெரிய ஃபார்மட்டாக பார்க்கப்படுகிறது. இதற்காக ஏதேனும் செய்யப்படவேண்டும்.

டி20 போட்டிகள் இருக்கின்றன, டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. அவை இரண்டுமே மிகவும் சிறந்த ஃபார்மட்கள். அவை இரண்டுக்கும் இடையே இருக்கும் இந்த 50 ஓவர் போட்டிகளுக்கு இப்போது எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதில்லை. ஆம், அதனால்தான் எண்ணற்ற போட்டிகளில் விளையாடிக்கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறேன்" எனக் கூறியிருக்கிறார் மொயீன் அலி.

banner

Related Stories

Related Stories