விளையாட்டு

"என் அடுத்த இலக்கு இதுதான்" -வெளிப்படையாக பேசிய தினேஷ் கார்த்திக் !

அடுத்து வரும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்காக சிறந்த பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன் என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

"என் அடுத்த இலக்கு இதுதான்" -வெளிப்படையாக பேசிய தினேஷ் கார்த்திக் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் கடைசி கட்டத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார்.

அவரின் இந்த அதிரடியே அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற உதவியது. இதனால் ஆட்டநாயகன் விருது தினேஷ் கார்த்திக்குக்கே வழங்கப்பட்டது.

"என் அடுத்த இலக்கு இதுதான்" -வெளிப்படையாக பேசிய தினேஷ் கார்த்திக் !

இந்த போட்டிக்கு பின்னர் தினேஷ் கார்த்திக் சக வீரரும் நெடுநாள் நண்பருமான அஸ்வினுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்த சின்ன சின்ன வெற்றிகள்தான் என்னை அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது.

கேப்டன் ரோகித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட்டின் கீழ் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது, இது எனக்கு பிடித்து இருக்கிறது. எனவே இந்த இணை தொடரவேண்டும் என்று விரும்புகிறேன்.

"என் அடுத்த இலக்கு இதுதான்" -வெளிப்படையாக பேசிய தினேஷ் கார்த்திக் !

அடுத்து வரும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்காக சிறந்த பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். இப்போதைக்கு என்னுடைய உட்சபட்ச இலக்கே அதுதான்" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories