விளையாட்டு

2 போட்டியில் ஆடிவிட்டு நீங்கள் விராட் கோலியை விமர்சிக்கிறீர்களா? -பொங்கி எழுந்த முன்னாள் பாக். வீரர்!

1 அல்லது 2 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் எல்லாம் விராட் கோலிக்கு அறிவுரை கொடுக்கிறார்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் விமர்சித்துள்ளார்.

 2 போட்டியில் ஆடிவிட்டு நீங்கள் விராட் கோலியை விமர்சிக்கிறீர்களா? -பொங்கி எழுந்த முன்னாள் பாக். வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

விராட் கோலி கடந்த சில மாதங்களாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வருகிறார். கடந்த ஆண்டு வரை அவர் சர்வதேசப் போட்டிகளில் சதம் அடிக்காதது தான் மிகப்பெரிய பிரச்சனையாகப் பேசப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு அவர் அரைசதம் அடிக்கவே தடுமாறிக்கொண்டிருக்கிறார். அதனால், அவர், அவர் ரசிகர்கள், இந்திய அணி என அனைத்து தரப்புமே பெரும் வருத்தத்தில் இருக்கின்றன.

இருந்தாலும் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் அனைத்து வீரர்களின் ஆதரவையும் பெற்றிருக்கிறார் கோலி. இருந்தாலும் விராட் கோலியின் இந்த மோசமான ஃபார்மை யாரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது.

 2 போட்டியில் ஆடிவிட்டு நீங்கள் விராட் கோலியை விமர்சிக்கிறீர்களா? -பொங்கி எழுந்த முன்னாள் பாக். வீரர்!

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் அவ்வப்போது விராட் கோலிக்கு இந்திய அணி ஆடும் தொடர்களில் இருந்து ஓய்வு வேறு கொடுக்கப்படுகிறது. அதனால், அது ரசிகர்களிடையே மேலும் பல கேள்விகளை எழுப்பிவிடுகிறது. கடைசியாக மேற்கொண்ட இங்கிலாந்து சுற்றுப் பயணம் கோலி மறக்கவேண்டிய ஒன்றாக அமைந்தது. அங்கு அனைத்து ஃபார்மட்களிலும் சேர்ந்து 6 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த அவர் அதிகபட்சமாக அடித்தது வெறும் 20 ரன்கள் தான்.

எனினும் அவரின் பேட்டிங் பார்ம்மை மீட்க அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் களம் இறங்குவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விராட் கோலியின் பார்ம் காரணமாக அவரை இந்திய அணியின் இருந்து நீக்கவேண்டும் என்றும், இல்லை, அவரை நீக்கக்கூடாது என்றும் இரு விதமான கருத்துக்களை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 2 போட்டியில் ஆடிவிட்டு நீங்கள் விராட் கோலியை விமர்சிக்கிறீர்களா? -பொங்கி எழுந்த முன்னாள் பாக். வீரர்!

அந்த வகையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கூறிய அவர், "எப்படிப்பட்ட ஒரு வீரராக இருந்தாலும் நிச்சயம் நெருக்கடியான நிலையை சந்திக்க நேரிடும். சிலர் அதிலிருந்து சீக்கிரம் எழுவார்கள், சிலர் மீள்வதற்கு சற்று நேரம் தேவைப் படும். விராட் கோலி வித்தியாசமான ஒரு வீரர், தற்பொழுது விராட் கோலிக்கு ஒரே ஒரு பெரிய இன்னிங்ஸ் மட்டும்தான் தேவை.

,அப்படி நடந்தால் நிச்சயம் அது அவருடைய ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றும், எழுபது சதங்கள் அடித்த ஒரு வீரர் இதிலிருந்து மீள முடியாது என்று நினைக்கிறீர்களா? 1 அல்லது 2 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் எல்லாம் விராட் கோலிக்கு அறிவுரை கொடுக்கிறார்கள் அது எனக்கு சிரிப்பு ஏற்படுத்துகிறது" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories