விளையாட்டு

"டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் விராட் கோலி இருக்க வேண்டும்".. ஆதரவு குரல் கொடுத்த முன்னாள் வீரர்!

விராட் கோலியின் அனுபவம் அளப்பரியது. அவர் நிச்சயம் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருக்கவேண்டும் என முன்னாள் வீரர் சையது கிர்மானி கூறிளள்ளார்.

"டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் விராட் கோலி இருக்க வேண்டும்"..  ஆதரவு குரல் கொடுத்த முன்னாள் வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விராட் கோலி கடந்த சில மாதங்களாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வருகிறார். கடந்த ஆண்டு வரை அவர் சர்வதேசப் போட்டிகளில் சதம் அடிக்காதது தான் மிகப்பெரிய பிரச்சனையாகப் பேசப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு அவர் அரைசதம் அடிக்கவே தடுமாறிக்கொண்டிருக்கிறார். அதனால், அவர், அவர் ரசிகர்கள், இந்திய அணி என அனைத்து தரப்புமே பெரும் வருத்தத்தில் இருக்கின்றன. இருந்தாலும் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் அனைத்து வீரர்களின் ஆதரவையும் பெற்றிருக்கிறார் கோலி. இருந்தாலும் விராட் கோலியின் இந்த மோசமான ஃபார்மை யாரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது.

"டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் விராட் கோலி இருக்க வேண்டும்"..  ஆதரவு குரல் கொடுத்த முன்னாள் வீரர்!

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் அவ்வப்போது விராட் கோலிக்கு இந்திய அணி ஆடும் தொடர்களில் இருந்து ஓய்வு வேறு கொடுக்கப்படுகிறது. அதனால், அது ரசிகர்களிடையே மேலும் பல கேள்விகளை எழுப்பிவிடுகிறது. கடைசியாக மேற்கொண்ட இங்கிலாந்து சுற்றுப் பயணம் கோலி மறக்கவேண்டிய ஒன்றாக அமைந்தது. அங்கு அனைத்து ஃபார்மட்களிலும் சேர்ந்து 6 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த அவர் அதிகபட்சமாக அடித்தது வெறும் 20 ரன்கள் தான். இந்நிலையில், அடுத்து இந்திய அணி மேற்கொள்ளவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்துக்கோ, ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்துக்கோ அவர் செல்லப்போவதில்லை. இந்தக் காலகட்டத்தை லண்டனில் தன் குடும்பத்தோடு செலவளித்துவிட்டு, ஆகஸ்ட் இறுதியில் தொடங்க இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் அவர் பங்கேற்பார் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்தத் தொடர் முடிந்த அடுத்த 2 மாதங்களில் டி20 உலகக் கோப்பை தொடங்கிவிடும். அதனால் அந்த உலகக் கோப்பை அணியில் இடம் பிடிக்க கோலிக்கு நிறைய வாய்ப்புகள் இல்லை.

"டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் விராட் கோலி இருக்க வேண்டும்"..  ஆதரவு குரல் கொடுத்த முன்னாள் வீரர்!

இப்போதைய சூழ்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கோலியின் இடத்துக்கு எந்த ஆபத்தும் இருக்காது என்றே தெரிகிறது. ஆனால், உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த விஷயம் பற்றிப் பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி, என்ன ஆனாலும் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் விராட் கோலி இடம்பெற்றே ஆகவேண்டும் என்று கூறியிருக்கிறார். கோலியின் பெருமைகளைப் பரைசாற்றியிருக்கும் கிர்மானி, கோலி போன்ற இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஒருவர் ஒரு நல்ல இன்னிங்ஸின் மூலம் பழைய ஃபார்முக்குத் திரும்பிவிடுவார் என்றும் கூறியிருக்கிறார்.

"விராட் கோலியின் அனுபவம் அளப்பரியது. அவர் நிச்சயம் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருக்கவேண்டும். அவர் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பிவிட்டால் அவரைத் தடுப்பது சாதாரண விஷயமாக இருக்காது. தனி ஆளாக அவர் போட்டியின் முடிவுகளை மாற்றிவிடுவார். கோலி அளவுக்கு அனுபவமும், திறமையும் கொண்ட வீரர்கள் நிச்சயம் உலகக் கோப்பை அணியில் இருக்கவேண்டும்" என்று கூறியிருக்கிறார் கிர்மானி.

"டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் விராட் கோலி இருக்க வேண்டும்"..  ஆதரவு குரல் கொடுத்த முன்னாள் வீரர்!

சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சில மிகச் சிறப்பான இன்னிங்ஸ்கள் ஆடியிருந்தார் தீபக் ஹூடா. ஆனாலும் கோலி அணிக்குத் திரும்பிய பின்னர் அவருக்கு ஹூடா வழிவிட வேண்டியதாக இருந்தது. வாய்ப்புக்காக பல இளம் வீரர்கள் காத்திருந்தாலும் கோலி போன்ற ஒரு அசாதாரண வீரருக்காக சில விதிவிலக்குகள் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் கிர்மானி. விராட் கோலி அந்த அளவுக்கு இந்திய கிரிக்கெட்டுக்கு பங்களித்திருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

"இந்திய அணியில் மிகப் பெரிய போட்டி இருக்கிறது. இதே நேரம் விராட் கோலியின் இடத்தில் வேறு எந்த வீரராவது இருந்திருந்தால், நிச்சயம் அவர் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டிருப்பார். ஆனால் கோலி போன்ற ஒரு வீரருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டே தீரவேண்டும்" என்று கூறியிருக்கிறார் சையது கிர்மானி.

banner

Related Stories

Related Stories