விளையாட்டு

அடுத்தடுத்து தொடர்களில் இருந்து ஓய்வு.. முடிவுக்கு வருகிறதா விராட் கோலியின் கிரிக்கெட் பயணம்?

கொடிகட்டி பறந்துகொண்டிருந்த விராட் கோலி, இப்போது ஃபார்மில் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்.

அடுத்தடுத்து தொடர்களில் இருந்து ஓய்வு.. முடிவுக்கு வருகிறதா விராட் கோலியின் கிரிக்கெட் பயணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சில ஆண்டுகளுக்கு முன்பு கொடிகட்டி பறந்துகொண்டிருந்த விராட் கோலி, இப்போது ஃபார்மில் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார். தென்னாப்பிரிக்க அணியுடனான டி20 போட்டியில் விளையாடாத அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 11 மற்றும் 20 ரன்களே எடுத்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு வெறும் 4 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளியாடியிருக்கிறார் விராட் கோலி.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து வெறும் 12 ரன்களே அடித்தார் அவர். தீபக் ஹூடா, இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ் போன்ற இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது, கோலி தன்னுடைய முழு திறனையும் விரைவில் நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதற்கிடையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜூலை 22 தொடங்கும் ஒருநாள் தொடருக்கும் அவருக்கு ஓய்வு அளிக்கப்படிருக்கிறது.

அடுத்தடுத்து தொடர்களில் இருந்து ஓய்வு.. முடிவுக்கு வருகிறதா விராட் கோலியின் கிரிக்கெட் பயணம்?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியை ஷிகர் தவான் வழிநடத்தவுள்ளார். விராட் கோலி மட்டுமல்லாமல், இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும் இந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. கொரோனா காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் விளையாடவில்லை. இந்நிலையில், இரண்டு முன்னணி வீரர்களுக்கும் ஒரு தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டிருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதில் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கர்சன் காவ்ரியும் ஒருவர்.

அடுத்தடுத்து தொடர்களில் இருந்து ஓய்வு.. முடிவுக்கு வருகிறதா விராட் கோலியின் கிரிக்கெட் பயணம்?

வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருவதால், அவர்களின் வேலைப்பளுவைக் குறைக்க இந்திய அணி நிர்வாகம் இப்படி தொடர்ந்து அணியில் பல மாற்றங்களை செய்து வருகிறது. அதன் காரணமாக சமீபத்திய தொடர்களில் ஏழு வேறு கேப்டன்கள் இந்தியாவை வழிநடத்தியிருக்கிறார்கள். விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா, ஷிகர் தவான் என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

"விராட் கோலி, ரோஹித் ஷர்மா இருவருக்கும் எவ்வளவு ஓய்வு தான் தேவை? விராட் கோலி அந்த டெஸ்ட் போட்டியில் எவ்வளவு நேரம் விளையாடிவிட்டார்? இந்திய அணிக்கு விளையாடுவது தான் அவர்களின் பிரதானமாக இருக்கவேண்டும். ஐபிஎல் தொடரில் விளையாடும்போது வேண்டுமானால் நீங்கள் விளம்பரங்களில் நடியுங்கள். இந்திய அணிக்கு விளையாடும்போது அதைச் செய்யக்கூடாது. வேலைப்பளுவை சமாளிப்பதாகக் கூறி ஓயாமல் ஓய்வு கேட்கக்கூடாது.

அடுத்தடுத்து தொடர்களில் இருந்து ஓய்வு.. முடிவுக்கு வருகிறதா விராட் கோலியின் கிரிக்கெட் பயணம்?

வீரர்கள் அவர்களின் திறமை அடிப்படையில் தேர்வு செய்யப்படவேண்டும். விராட் கோலி பல தருணங்களில் இந்திய அணியைப் பெருமைப்பட வைத்திருக்கிறார். ஆனால், அவர் ஃபார்மில் இல்லையென்றால் அவரை அணியில் இருந்து கழட்டிவிட வேண்டும். இது அவ்வளவு கஷ்டமான காரியம் ஒன்றும் இல்லை. ஃபார்மில் இருக்கும் வீரர்களை அணிக்குக் கொண்டு வாருங்கள். விராட் கோலி மிகப்பெரிய வீரர் தான். ஆனால், ரன்கள் எங்கே இருந்து வருகிறது. பழைய பெயரை வைத்துக்கொண்டு எவ்வளவு காலம் விளையாடிவிட முடியும். டெஸ்ட் போட்டிகளில் 27வது சதத்தோடு தேங்கிவிட்டார் அவர். அதேசமயம் அவரை விட மிகவும் பின்தங்கியிருந்த ஜோ ரூட் சமீபத்தில் கோலியை முந்திவிட்டார்" என்று காட்டமாக கூறியிருக்கிறார் காவ்ரி.

விராட் கோலி, ரோஹித் ஷர்மா மட்டுமல்ல, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கு ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி போன்ற மூத்த வீரர்களுக்கும் கூட ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இளம் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கும் இந்த தொடரில் இந்திய அணி நிர்வாகம் ஓய்வு கொடுத்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories