விளையாட்டு

ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்ட இலங்கை அணி.. கண்ணீரில் மூழ்கியுள்ள தேசத்தில் ஒரு வெற்றிப்புன்னகை!

ஆஸ்திரேலிய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்ட இலங்கை அணி.. கண்ணீரில் மூழ்கியுள்ள தேசத்தில் ஒரு வெற்றிப்புன்னகை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு அங்கு 3 டி20 மற்றும் 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் 3 டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று இலங்கை அணி பதிலடி கொடுத்தது.

அதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்ட இலங்கை அணி.. கண்ணீரில் மூழ்கியுள்ள தேசத்தில் ஒரு வெற்றிப்புன்னகை!

இந்த நிலையில் இந்த அணிகளுக்கு இடையே நடக்கும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய அந்த அணி 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் ஸ்டீவன் ஸ்மித், 145 ரன்கள் குவித்தார். பின்னர் ஆடிய இலங்கை அணி 554 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் தினேஷ் சண்டிமால் அதிகபட்சமாக 206 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்ட இலங்கை அணி.. கண்ணீரில் மூழ்கியுள்ள தேசத்தில் ஒரு வெற்றிப்புன்னகை!

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்கமுடியாமல் அடுத்தது விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இலங்கை அணி பெற்ற இந்த வெற்றியினால் டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டத்தால் இலங்கை பாதிக்கப்பட்டுநிலையில் இலங்கை அணியின் இந்த வெற்றி அவர்களுக்கு சிறிது மகிழ்ச்சியை வரவைத்தால் அது மகிழ்ச்சிதானே?

banner

Related Stories

Related Stories