விளையாட்டு

“நீங்கள் மிகப்பெரிய வீரராக இருக்கலாம். ஆனால், அதற்காக..” : கோலியை பற்றி கபில் தேவ் பேசியது என்ன?

நீங்கள் மிகப்பெரிய வீரராக இருக்கலாம். ஆனால், அதற்காக நீங்கள் மோசமாக விளையாடினாலும் அணியில் இடம் கிடைக்கும் என்று அர்த்தம் இல்லை" என்றும் கூறியிருக்கிறார் கபில்.

“நீங்கள் மிகப்பெரிய வீரராக இருக்கலாம். ஆனால், அதற்காக..” : கோலியை பற்றி கபில் தேவ் பேசியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய அணியில் இருந்து விராட் கோலியை நீக்குவது என்பது ஒரு வருடத்துக்கு முன்பு வரை நினைத்துப் பார்க்க முடியாத விஷயமாக இருந்தது. ஆனால், இப்போது சர்வதேச டி20 போட்டிகளில் அது நடந்துவிடும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சர்வதேசப் போட்டிகளில் சதம் அடித்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அதுமட்டும் அல்லாமல், அவரது ஃபார்மும் பெரும் அளவுக்குக் குறைந்துவிட்டது.

2022 இபிஎல் தொடரில் 16 இன்னிங்ஸ்களில் விளையாடிய விராட் கோலி வெறும் 341 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதுவும் 115.98 என்ற மிகவும் மோசமான ஸ்டிரைக் ரேட்டில் தான் அடித்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் பெரிதாக அவர் ஸ்கோர் செய்யவில்லை. இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 11 மற்றும் 20 ரன்களே எடுத்தார் அவர். அதுமட்டுமல்லாமல், கடந்த 2021 டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இரண்டே இரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடியிருக்கிறார்.

“நீங்கள் மிகப்பெரிய வீரராக இருக்கலாம். ஆனால், அதற்காக..” : கோலியை பற்றி கபில் தேவ் பேசியது என்ன?
Gareth Copley

இதுபற்றிப் பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் உலகக் கோப்பை வென்று கொடுத்த ஜாம்பவானுமான கபில் தேவ், ரவிச்சந்திரன் அஷ்வினை டெஸ்ட் அணியில் இருந்து வெளியே உட்கார வைக்க முடியும் எனில், கோலியையும் சர்வதேச டி20 அணியிலிருந்து வெளியில் அமரவைக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

"சர்வதேச டி20 போட்டிகளின் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து கோலியை வெளியே உட்காரவைக்கும் நிலை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. உலகின் நம்பர் 2 பௌலரான ரவிச்சந்திரன் அஷ்வினை டெஸ்ட் அணியில் இருந்து வெளியே உட்காரவைக்க முடியும் என்றால், முன்னாள் வேர்ல்ட் நம்பர் 1 பேட்ஸ்மேனை அணியில் இருந்து கழட்டிவிட முடியும் தானே!" என்று கேள்வி கேட்டிருக்கிறார் கபில் தேவ்.

“நீங்கள் மிகப்பெரிய வீரராக இருக்கலாம். ஆனால், அதற்காக..” : கோலியை பற்றி கபில் தேவ் பேசியது என்ன?

"கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் பார்த்த கோலியைப் போல் இப்போது இல்லை. அவர் முன்பு போல் இப்போது பேட்டிங் செய்வதில்லை. அவருடைய சிறந்த செயல்பாடுகளால் தான் அவர் இந்த நற்பெயரைப் பெற்றார். ஆனால், அவர் அப்படி நன்றாக விளையாடவில்லை என்றால், அதற்காக நல்ல ஃபார்மில் இருக்கும் இளைஞர்களை வெளியே அமரவைக்கக் கூடாது. அணியில் ஒரு நல்ல ஆரோக்கியமான போட்டி இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இளம் வீரர்கள் விராட் கோலியை விட சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர்களுக்கான வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும்" என்றார் கபில்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி அடுத்த ஆடப்போகும் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் சர்வதேச டி20 போட்டியிலும் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் போட்டியை இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பதை, அவர் அணியில் இருந்து கழட்டிவிடப் பட்டதாகவும் கருதலாம் என்று கூறியிருக்கிறார் கபில் தேவ்.

“நீங்கள் மிகப்பெரிய வீரராக இருக்கலாம். ஆனால், அதற்காக..” : கோலியை பற்றி கபில் தேவ் பேசியது என்ன?

"நீங்கல் இதை ஓய்வு என்றும் கூறலாம். ஒருசிலர் இதை கழட்டிவிடப்பட்டதாகவும் கருதலாம். ஒவ்வொருவருக்கும் வேறு வேறு பார்வை இருக்கிறது. கோலியைப் போன்ற ஒரு வீரரைத் தேர்வாளர்கள் எடுக்கவில்லை என்றால், ஒரு மிகப் பெரிய வீரர் சரியாக விளையாடுவதில்லை என்று தானே அர்த்தம்.

அதற்குப் பதிலாக ஃபார்மில் இருக்கும் வீரர்களை விளையாட வைக்கவேண்டும். அது அணிக்கு அதிக ஆப்ஷன்கள் கொடுக்கும். வெறும் பெயரை மட்டுமே கருதி அணியைத் தேர்வு செய்ய முடியாது. நீங்கள் மிகப்பெரிய வீரராக இருக்கலாம். ஆனால், அதற்காக நீங்கள் மோசமாக விளையாடினாலும் அணியில் இடம் கிடைக்கும் என்று அர்த்தம் இல்லை" என்றும் கூறியிருக்கிறார் கபில்.

banner

Related Stories

Related Stories