விளையாட்டு

இலங்கை vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி! 2-ம் நாள் யாருக்கு சாதகம் ?

இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் குவிந்துள்ளது.

இலங்கை vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி! 2-ம் நாள் யாருக்கு சாதகம் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு அங்கு 3 டி20 மற்றும் 5 ஒருநாள்,2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் 3 டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று இலங்கை அணி பதிலடி கொடுத்தது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி காலே நகரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் ஆடிய இலங்கை அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி! 2-ம் நாள் யாருக்கு சாதகம் ?

இலங்கை தரப்பில், அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 59 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக வீசிய நாதன் லயான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல ஸ்வப்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி, தற்போதைய நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் குவிந்திருந்த நிலையில் மழை பெய்து ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 47 ரன்கள் குவித்து ஆடி வருகிறார்.

banner

Related Stories

Related Stories