விளையாட்டு

போட்டியின்போது நீச்சல் குளத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள் !

நீச்சல் போட்டியில் பங்கேற்ற நீச்சல் வீராங்கனை மயங்கி நீச்சல் குளத்தில் விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போட்டியின்போது நீச்சல் குளத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்ற அமெரிக்கா நீச்சல் வீராங்கனை அனிதா அல்வாரெஸ் நீச்சல் குளத்தின் உள்ளே மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதைக் கண்ட சக நீச்சல் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த தருணத்தில் உடனடியாக சுதாரித்த அமெரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் மார்காவால் ஃபுயெண்டஸ், நீச்சல் குளத்தில் குதித்து உடனடியாக நீச்சல் வீராங்கனை அனிதா அல்வாரெஸை மீட்டுள்ளார்.

போட்டியின்போது நீச்சல் குளத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள் !

இது குறித்து பேசியுள்ள பயிற்சியாளர் மார்காவால் ஃபுயெண்டஸ், "உயிர்காப்பாளர்கள் நீச்சல் குளத்தில் குதிக்காததால் நான் உள்ளே குதிக்க வேண்டியிருந்தது. அவள் சுவாசிக்கவில்லை என்று நான் பயந்தேன், ஆனால் இப்போது அவள் நன்றாக இருக்கிறாள். அவளுடைய நுரையீரலில் தண்ணீர் நிரம்பியிருந்ததால் அவள் குறைந்தது இரண்டு நிமிடங்களாவது மூச்சுவிடாமல் இருந்தாள் என்று நினைக்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories