இந்தியா

பெற்றோரின் செல்போனை ஹேக் செய்த சிறுவன்.. காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன போலிஸார்! பின்னணி என்ன?

ராஜஸ்தானில் சிறுவன் ஒருவன் தனது பெற்றோரின் செல்போனை ஹேக் செய்து நாடகமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரின் செல்போனை ஹேக் செய்த சிறுவன்.. காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன போலிஸார்! பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு தம்பதியினர் போலிஸில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் தங்கள் செல்போன்களை யாரோ ஹேக் செய்துவிட்டதாகவும் வீட்டில் ப்ளூடூத் போன்ற சாதனங்களை வைப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் போலிஸார் விசாரணையைத் தொடங்கியபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதில், அந்த தம்பதியின் செல்போனை ஹேக் செய்ததே அவரது 13 வயது மகன்தான் என்பது தெரியவந்துள்ளது. முதலில் இதனை மறுத்த சிறுவனும் பிறகு இதை ஒப்புக்கொண்டுள்ளார்.

பெற்றோரின் செல்போனை ஹேக் செய்த சிறுவன்.. காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன போலிஸார்! பின்னணி என்ன?

ஆரம்ப கட்ட விசாரணையில் இதை ஒரு ஹேக்கர் சொல்லி செய்ததாகவும், இல்லாவிட்டால் பெற்றோரை கொன்றுவிடுவதாக அந்த ஹேக்கர் மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியபோது பெற்றோரை பிராங் செய்வதற்காக இந்த செயலை அவர் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

பெற்றோரின் செல்போனை ஹேக் செய்த சிறுவன்.. காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன போலிஸார்! பின்னணி என்ன?

இது தவிர சிறுவனின் மாமா செல்போனில் இருந்தே இது போன்ற செயலில் ஈடுபட்டதும், இதற்கு மாமாவும் உடந்தையாக இருந்துள்ளதும் தெரியவந்தது. இது தொடர்பாக அந்த தம்பதி புகார் ஏதும் அளிக்காததால் போலிஸார் இது தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. ஆனால், பொதுமக்களுக்கு இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் விதமாக இதை வெளியிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories