விளையாட்டு

”சச்சின் சாதனையை இவரால் முறியடிக்க முடியும்”.. அலெய்ஸ்டர் குக் சொன்ன இங்கிலாந்து வீரர் யார்?

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட்டால் முறியடிக்க முடியும் என இங்கிலாந்து ஜாம்பவான் அலெய்ஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

”சச்சின் சாதனையை இவரால் முறியடிக்க முடியும்”..  அலெய்ஸ்டர் குக் சொன்ன இங்கிலாந்து வீரர் யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மூன்று ஃபார்ம்டர்களிலும் இங்கிலாந்து உருவாக்கிய மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஜோ ரூட் என்று கூறியிருக்கிறார் இங்கிலாந்து ஜாம்பவான் அலெய்ஸ்டர் குக்.

முன்னாள் கேப்டன் ஜோ ரூட் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து வீரர். அவர் தன் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும்போது, அவர் சச்சினின் சாதனைகளை முறியடிக்கக்கூடும் என்று பலரும் கருதினர். ஆனால், அது நடக்கவில்லை. தன்னுடைய 33வது வயதில் ஜோ ரூட் ஓய்வு பெறும்போது அலெய்ஸ்டர் குக் 12,472 ரன்கள் எடுத்திருந்தார். சச்சின் டெண்டுல்கரோ 15,921 ரன்கள் எடுத்திருக்கிறார்.

இப்போது, சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை நெருங்கக்கூடிய ஒருவராக கருதப்படுகிறார் இன்னொரு இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட். அலெய்ஸ்டர் குக்கிற்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடக்கும் இரண்டாவது இங்கிலாந்து வீரர் இவர்தான். நியூசிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார் ரூட். அந்தப் போட்டியில் தன்னுடைய 26வது டெஸ்ட் சதத்தையும் கடந்தார் ரூட். இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய அலெய்ஸ்டர் குக், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் நிச்சயம் தன்னை விட அதிக ரன்கள் எடுப்பார் என்று கூறியிருக்கிறார். தன்னைப் போல் அவரும் 33 வயதில் ஓய்வு பெற்றுவிடமாட்டார் என்று நம்புவதாகவும் கூறியிருக்கிறார் ரூட்.

“ரூட்டின் ஆட்டத்தை பார்ப்பது அவ்வளவு அற்புதமானது. நான் பார்த்ததிலேயே முழுமையான இங்கிலாந்து பேட்ஸ்மேன் இவர்தான்” என்று சமீபத்தில் கொடுத்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் குக். கெவின் பீட்டர்சன் அற்புதமான இன்னிங்ஸ் ஆடக்கூடியவர் என்றாலும், ஜோ ரூட் தான் மூன்று ஃபார்மட்களிலும் சிறப்பாக ஆடக்கூடிய முழுமையான பேட்ஸ்மேன் என்று கூறியிருக்கிறார் குக்.

”சச்சின் சாதனையை இவரால் முறியடிக்க முடியும்”..  அலெய்ஸ்டர் குக் சொன்ன இங்கிலாந்து வீரர் யார்?

“ஒரு அதி அற்புதமான இன்னிங்ஸ் ஆடக்கூடிய வீரர் என்றால் அது நிச்சயம் கெவின் பீட்டர்சன்தான். ஆனால், மூன்று ஃபார்மட்களிலும் முழுமையான வீரர் என்றால் அது ஜோ ரூட். அவருடைய கன்சிஸ்டென்ஸி அசாத்தியமானது” என்று கூறியிருக்கிறார் குக்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்துவதால், சமீபத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஜோ ரூட்டின் பங்கேற்பு குறைந்திருக்கிறது. இருந்தாலும், 2019 உலகக் கோப்பை தொடரை வென்ற இங்கிலாந்து அணியில் மிகமுக்கிய அங்கமாக விளங்கினார் ரூட். 32 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் ரூட் 893 ரன்கள் எடுத்திருக்கிறார். சராசரி: 35.72. ஸ்டிரைக் ரேட்: 126.30.

2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆனபோதே ஜோ ரூடின் திறமைகளை தான் உணர்ந்ததாகக் கூறியிருக்கிறார் ஜோ ரூட். அந்த சமயத்தில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தது குக் தான். “சுழற்பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொள்ளும் வீரர்களுள் ரூட்டும் ஒருவர். அப்போதே சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதிக்க அவர் தயாராக இருந்தார். காயங்கள் ஏதும் இல்லையெனில், என் சாதனைகளைக் கடந்து அவர் பல தூரம் செல்வார்” என்று சொல்லியிருக்கிறார் சர் அலெய்ஸ்டர் குக்.

“33 வயதில் ஓய்வு பெற்றுவிடுவேன் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. இருந்தாலும், அந்த சமயத்தில் ஓய்வு பெற அதுதான் சரியான தருணம் என்று தோன்றியது. ரன் எடுக்கவேண்டும் என்ற உளவியல் நெருக்கடி என் மீது மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியது. அவருக்கு இது எளிதானது என்று நான் சொல்லவில்லை. ஆனால், எனக்கு இருந்த பிரச்னை அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ரூட்டைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் கடினம். நான் முப்பது ரன்களைக் கடக்க உருண்டு புரள வேண்டியிருக்கும். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கூட ஆகிவிடும். ஆனால், ரூட்டுக்கு அப்படியில்லை. ரிஸ்க் இல்லாத ஷாட்கள் அவரிடம் நிறைய உண்டு. அதுவும் 360 டிகிரியில் அந்த ஷாட்களை ஆடக்கூடியவர். பெரும்பாலும் 40 பந்துகளிலேயே 30 ரன்கள் அடித்துவிடக்கூடியவர் அவர்” என்றும் ரூட் பற்றி பெருமையாகப் பேசியிருக்கிறார் குக்.

banner

Related Stories

Related Stories