விளையாட்டு

“14வது முறை சாம்பியன் பட்டம்.. 114 போட்டிகளில் 3ல் மட்டும் தோல்வி” : மீண்டும் மகுடத்தை அலங்கரித்த நடால்!

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் இறுதிப் போட்டியில் 14வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ரஃபேல் நடால் சாதனை படைத்துள்ளார்.

“14வது முறை சாம்பியன் பட்டம்.. 114 போட்டிகளில் 3ல் மட்டும் தோல்வி” :  மீண்டும் மகுடத்தை அலங்கரித்த நடால்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் இறுதிப் போட்டியில் 14வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று தான் "களிமண் நாயகன்" என்பதை மீண்டும் ஒருமுறை டென்னிஸ் அரங்கில் ஆணித்தனமாக நிரூபித்திருக்கிறார் ரஃபேல் நடால். இறுதி போட்டியில் தன் டென்னிஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற இளம் வீரரை எதிர்கொண்ட தருணம் மற்றும் பிரெஞ்சு ஓபன் தொடரில் நடாலின் சாதனைகள் என்னென்ன இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஓபன் ஏராவில் நடைபெறும் தொடர்களை பொறுத்தவரை எப்பொழுதுமே பிரெஞ்ச் ஓபன் தொடருக்கு என்று தனி சிறப்பு உண்டு. களிமண் தரையில் நடத்தப்படும் இந்த தொடரில் நாயகனாக வலம் வருகிறார் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால்.

நடப்பாண்டு பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டியில் 13வது சாம்பியன் பட்டம் வென்றுள்ள களிமண் ஜாம்பவானான ரஃபேல் நடால், நார்வே வீரர் gasper ruud-யை எதிர்கொண்டார். அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வரவ் காயத்தால் விலக, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நடால், 23 வயதே ஆன கேஸ்பர் ரூடை எதிர்த்து விளையாடினார்.

முதல் செட்டை நடால் எளிதாக எடுத்தாலும் 2-வது செட்டில் இளம் வீரர் ruud நடாலுக்கு சவால் கொடுக்க அந்த செட்களத்தில் சற்று அதிரடியாக இருந்தது. இருப்பினும் களிமண் ஜாம்பவான் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தும் விதமாக விளையாடிய நடால் 6-3 6-3 6-0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் மகுடத்தை மீண்டும் அலங்கரித்தார்.

“14வது முறை சாம்பியன் பட்டம்.. 114 போட்டிகளில் 3ல் மட்டும் தோல்வி” :  மீண்டும் மகுடத்தை அலங்கரித்த நடால்!

14வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை அலங்கரித்த நடால், ஒட்டுமொத்தமாக கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 22வது பட்டத்தையும் ருசித்தார். தனது 36 வயதில் இந்த அசாத்திய சாதனையை நடால் படைத்திருப்பது என்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றே.

2005ல் தொடங்கி பிரெஞ்ச் ஓபன் அரங்கில் மூன்று முறை ஹாட்ரிக் பட்டத்தை வென்றதோடு, இரண்டு முறை தொடர்ந்து நான்கு பட்டங்களை வென்ற நடால், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் அரையிறுதியில் வெளியேறியதற்கு இந்த முறை அதற்கு பதிலடி கொடுத்து நான் தான் களிமண் தரையின் ராஜா என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியிருக்கிறார்.

நடப்பாண்டு பிரெஞ்சு ஓபனில் இறுதி போட்டி நடாலுக்கு மட்டுமல்ல, எதிரணி வீரர் கேஸ்பர்-க்கும் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு தான். நடாலின் டென்னிஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர் தான் கேஸ்பர். இறுதிப்போட்டியில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே நடந்த யுத்தத்தை அரங்கில் இருந்த அனைவருமே ஆச்சரியத்துடன் கொண்டாடி ரசித்தனர்.

2013 இல் பிரெஞ்சு ஓபனில் இறுதி போட்டியில் நடால் விளையாடியதை அரங்கில் அமர்ந்து ரசித்தார் gasper ruud. 2018 முதல் அவரது அகாடமியில் பயிற்சி பெற்று வரும் அவர், 4 ஆண்டுகளில் ஆசிரியரை எதிர்கொள்ளும் அளவிற்கு வளர்ச்சி எட்டி இருப்பதும் நடாலி பெருமைக்குரியதே.

ஃப்ரெஞ்ச் ஓபன் வரலாற்றில் 114 போட்டிகளில் விளையாடியுள்ள நடால் அதில் 3ல் மட்டுமே தோல்வியை தழுவி இருக்கிறார். தவிர பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் விளையாடிய இரண்டாவது வயது மூத்த வீரர் என்ற சாதனையையும் அலங்கரித்துள்ளார் நடால்.

விளையாட்டுக் களம் மட்டுமல்ல இந்த களத்தை எடுத்துக் கொண்டாலும் ஒருவரின் சாதனையை இன்னொருவர் முறியடிப்பது என்பதும் வரலாற்று நிகழ்வு. அந்த வகையில் களிமண் நாயகனாக வலம் வரும் நடாலின் அசாத்திய சாதனையை முறியடிக்க மற்றொரு வீரர் எதிர்காலத்தில் வந்தாலும், நடாலுக்கு நிகர் நடால் என்பதே நிதர்சனம்.

banner

Related Stories

Related Stories