விளையாட்டு

“அர்ஜுன் டெண்டுல்கருக்கு நெருக்கடி.. அறிவுரை கூற நாம் யார்?” : கபில்தேவ் அட்வைஸ்!

அர்ஜுன் மீது யாரும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடாது என இந்திய முன்னாள் வீரர் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

“அர்ஜுன் டெண்டுல்கருக்கு நெருக்கடி.. அறிவுரை கூற நாம் யார்?” : கபில்தேவ் அட்வைஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2022 ஐபிஎல் சீசனில் அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பலருக்கும் வருத்தமாக இருந்தது. ஐ.பி.எல் 2022 ஏலத்தில் 30 லட்ச ரூபாய் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி அவரை வாங்கியது. பிளே ஆஃப் வாய்ப்பை மிக விரைவாக இழந்திருந்த போதிலும் மும்பை அணி அவருக்கு வாய்ப்பு கொடுக்காதது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

ஹிரிதிக் ஷொகீன் குமார் கார்த்திகேயா, ரமன்தீப் சிங் போன்ற இளம் வீரர்கள் பலரும் அணியில் வாய்ப்பு பெற்ற நிலையில், அர்ஜுன் டெண்டுல்கர் சீசன் முழுவதும் பெஞ்சில் தான் அமர்ந்திருந்தார். அர்ஜுன் டெண்டுல்கரின் வாய்ப்பு பற்றிப் பேசிய மும்பை இந்தியன்ஸ் பௌலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட், 22 வயது அர்ஜுன் டெண்டுல்கர் இன்னும் தன் திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த விஷயம் பற்றிப் பேசியிருக்கும் ஜாம்பவான் கபில் தேவ், தன் தந்தையின் பெயரை தன் பெயருக்குப் பின்னால் சுமந்துகொண்டிருக்கும் அர்ஜுன், எப்போதும் ஒரு கூடுதல் நெருக்கடியை சுமந்துகொண்டேதான் இருப்பார் என்று கூறியிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் நிர்ணயித்திருக்கும் பேட்டிங்கின் தரத்தை இந்தக் கால பேட்ஸ்மேன்கள் எவருமே கூட எட்ட முடியாது. அப்படியிருக்கையில் அவர் மகனுக்குமே அது அசாத்தியமான விஷயம் தான். அர்ஜுன் டெண்டுல்கரை எந்தக் காரணத்திற்காகவும் அவர் தந்தையோடு ஒப்பிடக்கூடாது என்று கூறியிருக்கும் கபில் தேவ், இந்த இளம் வயதில் அவரை தன் கேமை அனுபவித்து விளையாட அனுமதிக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

“எல்லோரும் ஏன் அவரைப் பற்றி பேசுகிறார்கள்? ஏனெனில், அவர் சச்சின் டெண்டுல்கரின் மகன். அவர் தன்னுடைய ஆட்டத்தை வெளிக்கொண்டுவரட்டும். அவரை சச்சினோடு ஒப்பிடாதீர்கள். டெண்டுல்கரின் மகனாக இருப்பதில் சாதகங்களும் இருக்கிறது, பாதகங்களும் இருக்கிறது. கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மேனின் மகன், நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தன் பெயரையே மாற்றிக்கொண்டார். எல்லோஒரும் தன் தந்தையிடம் எதிர்பார்த்ததை தன்னிடமும் எதிர்பார்ப்பார்கள் என்பதால், அவர் பிராட்மேன் என்ற தன்னுடைய இரண்டாவது பெயரையே மாற்றிக்கொண்டார்” என்று கூறினார் கபில்தேவ்.

“அர்ஜுன் டெண்டுல்கருக்கு நெருக்கடி.. அறிவுரை கூற நாம் யார்?” : கபில்தேவ் அட்வைஸ்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் இரண்டு ஆண்டுகளாக இருக்கும் அர்ஜுன் டெண்டுல்கர் இன்னும் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. மும்பை டி20 லீகில் கூட மும்பை அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இருந்தாலும் பலமுறை இந்திய தேசிய அணிக்கு அவர் நெட் பௌலராக இருந்திருக்கிறார். விராட் கோலி, ரோஹித் ஷர்மா, தோனி உள்பட பல நட்சத்திர வீரர்களுக்குப் பந்துவீசியிருக்கிறார். அர்ஜுன் டெண்டுல்கர் எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தும் எவ்விதமான நெருக்கடியையும் சுமக்கத் தேவையில்லை. தன் தந்தையின் ஆட்டத்தில் பாதி ஆடினால் கூட அர்ஜுன் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் என்று அர்த்தம் என்றும் கூறியிருக்கிறார் கபில் தேவ்.

“அர்ஜுன் மீது யாரும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடாது. ஜாம்பவான் சச்சினை தந்தையைக் கொண்டிருக்கும் அவருக்கு அறிவுரை கூற நாம் யார்? இருந்தாலும், அவருக்கு நான் ஒரேயொரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்... உன் ஆட்டத்தை அனுபவித்து விளையாடு. நீ எதையும் நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை. உன் தந்தையின் ஆட்டத்தில் பாதியை எட்டினால்கூட அது சிறப்பான விஷயம். டெண்டுல்கர் எனும் பெயர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஏனெனில், சச்சின் சரித்திரம் படைத்த ஒருவர்” என்று கூறினார் இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ்.

banner

Related Stories

Related Stories