விளையாட்டு

"கேப்டன் தோனியால் ஓய்வு பெறும் எண்ணம் வந்தது".. ஆனால் : மனம் திறந்த வீரேந்திர சேவாக்!

கேப்டன் மஹேந்திர சிங் தோனியால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் ஏற்பட்டதாக அதிரடி ஆட்டக்காரர் சேவாக் மனம் திறந்து பேசிள்ளார்.

"கேப்டன் தோனியால் ஓய்வு பெறும் எண்ணம் வந்தது".. ஆனால் : மனம் திறந்த வீரேந்திர சேவாக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2008ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது சேவாக்கை அணியிலிருந்து வெளியே அமர்த்தினார் அப்போதைய கேப்டன் மஹேந்திர சிங் தோனி. அப்போது ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் ஏற்பட்டதாக தற்போது கூறியிருக்கிறார் சேவாக்.

“2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்தபோது ஓய்வு பெறுவது பற்றிய கேள்வி எனக்குள் தோன்றியது. டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுத்த நான், ஒரு 150 அடித்தேன். ஆனால், ஒருநாள் தொடரின் முதல் மூன்று அல்லது நான்கு போட்டிகளில் என்னால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. அதனால், தோனி என்னை பிளேயிங் லெவனிலிருந்து வெளியே எடுத்தார். அதனால், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் எனக்கு வந்தது. டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடலாம் என்று நினைத்திருந்தேன்” என்று சமீபத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியின்போது கூறியிருக்கிறார் விரேந்தர் சேவாக்.

அந்த ஒருநாள் தொடருக்கு முன்பு டெஸ்ட் அரங்கில் அட்டகாசமான கம்பேக் ஒன்றை நிகழ்த்தினார் சேவாக். ஆனால், காமன்வெல்த் பேங்க் தொடரில் ஆடப்பட்ட 10 போட்டிகளில் ஐந்தில் மட்டுமே அவர் ஆடினார். இந்தியாவின் முதல் நான்கு போட்டிகளில் மொத்தமே 64 ரன்கள் மட்டுமே எடுத்த சேவாக், அதன்பிறகு அணியில் சேர்க்கப்படவில்லை. இரண்டு போட்டிகளுக்குப் பிறகு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டவர், அந்தப் போட்டியிலும் 14 ரன்களே எடுத்தார். அதனால், மீண்டும் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

"கேப்டன் தோனியால் ஓய்வு பெறும் எண்ணம் வந்தது".. ஆனால் : மனம் திறந்த வீரேந்திர சேவாக்!

சச்சின் டெண்டுல்கர் தான் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறவேண்டும் என்ற தன்னுடைய முடிவை மாற்ற வைத்தார் என்பதையும் கூறியிருக்கிறார் சேவாக். “அந்த சமயத்தில் சச்சின் தான் என்னைத் தடுத்தார். ‘இது உன் வாழ்க்கையின் மோசமான கட்டம். சற்று பொறுமையாக இரு. இந்தத் தொடர் முடிந்ததும் வீட்டிற்குச் செல். தீர்க்கமாக யோசி. அதன்பிறகு என்ன செய்யவேண்டும் என்று முடிவு டெய்’ என்று சச்சின் கூறினார். அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் நான் என் ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை” என்று கூறினார் சேவாக்.

“இங்கு மொத்தம் இரண்டு வகையான வீரர்கள் இருக்கிறார்கள் - முதலாவது சவால்களை விரும்புபவர்கள். சவால்கள் இருந்தார்கள் அவர்கள் மிகவும் உற்சாகமாக அதை எதிர்கொள்வார்கள். விராட் கோலி அந்த வகையைச் சேர்ந்தவர். அவர் அனைத்து விமர்சனங்களையும் கவனித்துவிட்டு, ரன்கள் எடுத்து களத்தில் அதற்கு பதில் சொல்வார். இன்னும் சிலர் இந்த விமர்சனங்களையெல்லம சட்டை செய்யாதவர்கள். ஏனெனில், கடைசியில் என்ன செய்யவேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். நான் அப்படிப்பட்ட ஆள். எனக்கு யார் என்னை விமர்சனம் செய்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. என்னைப் பொறுத்தவரை விளையாடவேண்டும், ரன் அடிக்கவேண்டும், வீட்டுக்குச் செல்லவேண்டும். அவ்வளவுதான்” என்றும் கூறினார் சேவாக்.

banner

Related Stories

Related Stories