விளையாட்டு

IPL 2022 சொதப்பினாலும்.. சென்னை அணிக்கு நம்பிக்கை கொடுத்த இளம் வீரர்கள்!

ஐ.பி.எல் 2022 தொடரில் சொதப்பினாலும் சென்னை அணியியின் இளம் வீரர்கள் அந்த அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளனர்.

IPL 2022 சொதப்பினாலும்..  சென்னை அணிக்கு நம்பிக்கை கொடுத்த இளம் வீரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஐ.பி.எல் 2022 தொடரில் மிக விரைவாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இறுதியாக புள்ளிப் பட்டியலில் அந்த அணி ஒன்பதாவது இடமே பிடித்தது. ஆனால், ஒரு சில வீரர்கள் மிகவும் சிறப்பான செயல்பாடை வெளிப்படுத்தினர். குறிப்பாக இளம் வீரர்களுக்கு தோனியின் தலைமையில் விளையாடியது கனவு நனவான தருணம். தொடரின் தொடக்கத்தில் தன்னுடைய கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் கொடுத்திருந்த நிலையில், அப்போது முடிவுகள் சரியாக வரவில்லை. அதேசமயம், தோனி மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு ஷிவம் தூபே, முகேஷ் சௌத்ரி, மஹீஷ் தீக்‌ஷனா, பிரசாந்த் சோலங்கி போன்ற இளம் வீரர்க்ள் சிறப்பாக விளையாடத் தொடங்கினர்.

அவர்களுள், இந்த சீசன் தன் சிஎஸ்கே அறிமுகம் பெற்ற சுழற்பந்துவீச்சாளர் பிரசாந்த் சோலங்கி தோனி தனக்குக் கொடுத்த ஒரு அறிவுரை பற்றிக் கூறியிருக்கிறார். மே 15ம் தேதி வான்கடே மைதானத்தில் நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் அறிமுகம் ஆனார் பிரசாந்த் சோலங்கி. அந்தப் போட்டியில் அவர் விக்கெட்டுகள் எதுவும் எடுக்கவில்லை. இருந்தாலும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர். அந்தப் போட்டியில் தோனியின் அறிவுரை அவருக்கு உதவியிருக்கிறது.

“மஹி பாய் அனைத்தையும் சிம்பிளாக வைத்துக்கொள்ளக்கூடிய ஒருவர். நீங்கள் லெக் ஸ்பின் வீசுகிறீர்களோ, கூக்ளி வீசிகுறீர்களோ இல்லை டாப் ஸ்பின் வீசுகிறீர்களோ, ரன் கொடுக்காதவரை நீங்கள் நன்றாகவே பந்துவீசுகிறீர்கள் என்பார். எங்களுக்கு அதிக டாட் பால்கள் வீசச் சொல்லி அறிவுரைகள் கொடுப்பார். ஏனெனில், டி-20 கிரிக்கெட்டில் அதுதான் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பார்” என்று கூறினார் சோலங்கி.

IPL 2022 சொதப்பினாலும்..  சென்னை அணிக்கு நம்பிக்கை கொடுத்த இளம் வீரர்கள்!

“இரண்டாவது போட்டியில் நாங்கள் பெரிய ஸ்கோர் எடுக்காததால் நான் பந்துவீச சற்று தாமதாமனது. தோனி பௌலர்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்தியதால் என்னை தாமதமாகத்தான் அழைத்தார். என்னுடைய முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துவிட்டனர். அப்போது தோனி எனக்கொரு அறிவுரை கூறினார். என்னுடைய லென்த்தை மாற்றி, ஷார்ட்டாக பந்துவீசச் சொன்னார். பேட்ஸ்மேனை பெரிய பௌண்டரிக்கு ஆடவைக்குமாறு கூறினார். அது எனக்கு நல்லபடியாக அமைந்தது” என்று கூறினார் பிரசாந்த் சோலங்கி.

“ஹிட்மெயர் என் பந்தை பௌண்டரிக்கு அனுப்பினார். மஹி பாய் மீண்டும் என்னை அழைத்து அவரை பெரிய பௌண்டரிக்கு ஆட வைக்குமாறு கூறினார். ஹிட்மெயர் கால்களுக்குள் ஒரு டாப் ஸ்பின் வீசினேன். அவர் அதை சரியாக அடிக்காமல் டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் ஆனார்” என்றும் அவர் கூறினார்.

பிரசாந்த் சோலங்கியை ஐபிஎல் 2022 ஏலத்தில் 1.2 கோடி ரூபாய்க்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். இதுதான் அவரின் அறிமுக சீசனாக இருந்தாலும், அவர் இதுவரை விளையாடியதை வைத்துப் பார்க்கும்போது அடுத்த சீசனில் அவர் நிச்சயம் அணிக்கு பெரும் பங்களிப்பைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை கிடைத்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories