விளையாட்டு

கொத்து கொத்தாக வீழ்ந்த பேட்ஸ்மேன்கள் - தொடர்ந்து சொதப்பும் பஞ்சாப்! #IPL2022

டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 160 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாமல் பஞ்சாப் தோற்றிருந்தது.

கொத்து கொத்தாக வீழ்ந்த பேட்ஸ்மேன்கள் - தொடர்ந்து சொதப்பும் பஞ்சாப்! #IPL2022
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பஞ்சாப் அணி வீரர்களெல்லாம் இணைந்து வேடிக்கையாக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தனர். அதாவது, ஓடேன் ஸ்மித் ஓடி வந்து இருமுவதை போலவும் அந்த இருமலால் மற்ற பஞ்சாப் வீரர்கள் வரிசையாக கொத்து கொத்தாக வீழ்வதை போலவும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தனர். வேடிக்கையாக செய்யப்பட்ட இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம் அதே பஞ்சாப் அணிதான்.

டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 160 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாமல் பஞ்சாப் தோற்றிருந்தது. அதிரடியாக தொடங்கிய பஞ்சாப் ஒரு கட்டத்தில் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்திருக்கும். இதை குறிப்பால் உணர்த்தும் வகையில்தான் அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.

பஞ்சாப் அணியின் பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டு டெல்லியை 159 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தனர். 160 ரன்களை நோக்கி பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் சேஸிங்க்கை தொடங்கினர். தொடக்கத்தில் பேர்ஸ்ட்டோ நன்றாக ஆடினார். அவர் அதிரடியாக 28 ரன்களை எடுத்து அவுட் ஆன போது அணியின் ஸ்கோர் 38. 38 ரன்களிலிருந்து 67 ரன்களை எட்டுவதற்குள் அதாவது கூடுதலாக 29 ரன்களை சேர்ப்பதற்குள் மேலும் 5 விக்கெட்டுகளை பஞ்சாப் இழந்திருந்தது. ராஜபக்சே, தவாண், மயங்க், லிவிங்ஸ்டன், ப்ரார் என அத்தனை முக்கிய பேட்ஸ்மேன்களும் காலி. இதெல்லாம் ஒரு 5 ஓவர்கள் இடைவெளியில் நடந்து முடிந்திருந்தது. இப்போது பஞ்சாப் அணியின் ஸ்கோர் 67-6. ஜித்தேஷ் சர்மா மட்டும் கொஞ்சம் நின்று போராடினார். ஆனால், அவராலும் அணியை வெல்ல வைக்க முடியவில்லை.

கொத்து கொத்தாக வீழ்ந்த பேட்ஸ்மேன்கள் - தொடர்ந்து சொதப்பும் பஞ்சாப்! #IPL2022

கொத்து கொத்தாக வரிசையாக விக்கெட்டை விடுதல் என்பதுதான் பஞ்சாப் அணியின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அது இந்த போட்டியில் மட்டுமில்லை. இந்த சீசன் முழுவதுமே அப்படித்தான். அதிரடியாக ஆட வேண்டும். ஒவ்வொரு பந்தையும் சிக்சராக்க வேண்டும் என்கிற அவர்களின் அணுகுமுறைதான் இங்கே பிரச்சனையாக இருக்கிறது. முக்கியமான பேட்ஸ்மேன்கள் எல்லாம் அதிரடியாக ஆடுகிறேன் என 15 ஓவருக்குள்ளேயே அவுட் ஆகிவிடுகிறார்கள். கடைசி 5 ஓவர்களை பெரும்பாலும் டெய்ல் எண்டர்கள்தான் ஆடுகிறார்கள். பெரும்பாலான போட்டிகளில் இதுதான் நிலை.

கடந்த சில ஆண்டுகளில் பஞ்சாபுக்கு கிடைத்திரும் மிகச்சிறந்த அணி இது. ஆனால், இந்த அணியை வைத்துக் கொண்டுமே அவர்கள் சொதப்புவது ஏற்புடையதாகவே இல்லை. On paper இல் பார்த்தால் இந்த சீசனில் வலுவான பேட்டிங் லைன் அப் பஞ்சாபுடையதாகத்தான் இருக்கும். ஆனால், பேப்பரில் இருக்கும் அந்த வலிமை களத்தில் வெளிப்படுவதே இல்லை. தங்களின் இயல்பான தகுதிக்குரியதை விட மிகக்குறைவாகவே எப்போதும் பெர்ஃபார்ம் செய்கின்றனர்.

கொத்து கொத்தாக வீழ்ந்த பேட்ஸ்மேன்கள் - தொடர்ந்து சொதப்பும் பஞ்சாப்! #IPL2022

பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் பௌலர்களின் தரமான செயல்பாடுகளும் ஒன்றுமே இல்லாமல் போகிறது. பல போட்டிகளில் பஞ்சாபின் பௌலர்கள் எதிரணியை மிகத்திறமையாக எதிரணியை சராசரியை விட குறைவான ஸ்கோருக்குள் அடக்கியிருக்கின்றனர். ஆனால், பேட்ஸ்மேன்கள் வலுவிருந்தும் தங்களின் தவறான அணுகுமுறையின் காரணமாக அந்த குறைவான ஸ்கோர்களை கூட சேஸ் செய்ய முடியாமல் சொதப்பி தோல்விக்கு காரணமாகின்றன. டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டமே இதற்கான மிகச்சிறந்த சாட்சி.

டி20 போட்டிகளில் தாக்குதல் ஆட்டத்தைதான் தொடுக்க வேண்டும். ஆனால், எப்போதும் அதை மட்டுமே செய்து கொண்டிருக்க முடியாது. சில சமயங்களில் தற்காப்பாகவும் ஆடியாக வேண்டும். அதை பஞ்சாப் உணரவே இல்லை. இனி உணர்ந்த எந்த பயனும் இல்லை. காலம் கடந்துவிட்டது. சீசனே முடியப்போகிறதே!

banner

Related Stories

Related Stories