விளையாட்டு

#IPL2022 : குஜராத் அணியை பழி தீர்க்குமா பஞ்சாப் கிங்ஸ் ? - இன்றைய போட்டியில் மீண்டும் மோதும் #GTvsPBKS

இன்று நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

#IPL2022 : குஜராத் அணியை பழி தீர்க்குமா பஞ்சாப் கிங்ஸ் ? - இன்றைய போட்டியில் மீண்டும் மோதும் #GTvsPBKS
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

போட்டி: குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

இடம்: டிஒய் பாடில் ஸ்டேடியம், நவி மும்பை

நேருக்கு நேர்:

போட்டிகள்: 1

குஜராத் டைட்டன்ஸ் வெற்றி: 1

பஞ்சாப் கிங்ஸ் வெற்றி: 0

முடிவு இல்லை: 0

சிறந்த பேட்டர்:

குஜராத் டைட்டன்ஸ்: ஹர்திக் பாண்டியா: 8 போட்டிகளில் 308 ரன்கள்

பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான்: 9 போட்டிகளில் 307 ரன்கள்

சிறந்த பௌலர்:

குஜராத் டைட்டன்ஸ்: முகமது ஷமி - 9 போட்டிகளில் 14 விக்கெட்டுகள்

பஞ்சாப் கிங்ஸ்: ககிஸோ ரபாடா - 9 போட்டிகளில் 12 விக்கெட்டுகள்

2022 ஐ.பி.எல் தொடரில் இதுவரை: இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோற்றிருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் அமர்ந்திருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், ஐ.பி.எல் வரலாற்றில் முதல் 10 போட்டிகளில் 9 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் அணி என்ற சாதனையை படைக்கும்.

இந்தப் போட்டியில் தோற்றாலும், அந்த அணியின் முதலிடத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. டிஒய் பாடில் ஸ்டேடியத்தில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியிருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். இந்த அணியின் அந்த ஒற்றைத் தோல்வி இந்த மைதானத்தில் தான் வந்தது. 9 போட்டிகளில் விளையாடியிருக்கும் பஞ்சாப் கிங்ஸ் 4 வெற்றிகளும் 5 தோல்விகளும் பெற்றிருக்கிறது. புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகளோடு ஏழாவது இடத்தில் (மே 1 நிலவரப்படி) இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்.

கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் அந்த அணி மூன்றில் தோற்றிருக்கிறது. டிஒய் பாடில் மைதானத்தில் இரண்டு போட்டிகளில் விளையாடியிருக்கும் பஞ்சாப் கிங்ஸ், 1 வெற்றியையும் 1 தோல்வியையும் பதிவு செய்திருக்கிறது. இந்த சீசன், இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அதைக் கடைசிப் பந்தில் சேஸ் செய்தது குஜராத் டைட்டன்ஸ். கடைசி 2 பந்துகளில் குஜராத் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. ஒடியன் ஸ்மித் வீசிய அந்த 2 பந்துகளையும் சிக்ஸராக்கி குஜராத்தை வெற்றி பெறவைத்தார் ராகுல் தெவேதியா!

கடைசிப் போட்டியில்: தங்கள் கடைசிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 6 விகெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. யாஷ் தயால் காயமடைந்ததால் அவருக்குப் பதில் களமிறங்கிய பிரதீப் சங்வான், மிகச் சிறப்பாக பந்துவீசி 19 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

டேவிட் மில்லர், ராகுல் தெவேதியா சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைக்க, 3 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்டியது குஜராத் டைட்டன்ஸ். லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணிக்கெதிராக விளையாடிய கடைசிப் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் 153 ரன்கள் எடுத்தது. ககிஸோ ரபாடா 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். ஆனால், பேட்ஸ்மேன்கள் பலரும் சொதப்ப, வெறும் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப்.

மாற்றங்கள்: குஜராத் டைட்டன்ஸ் அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணியும் மாற வாய்ப்பில்லை.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

குஜராத் டைட்டன்ஸ்: ரித்திமான் சஹா (WK), சுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா (C), டேவிட் மில்லர், ராகுல் தெவேதியா, ரஷீத் கான், பிரதீப் சங்வான், அல்சாரி ஜோசஃப், லாகி ஃபெர்குசன், முகமது ஷமி

பஞ்சாப் கிங்ஸ்: மயாங்க் அகர்வால் (C), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, பனுகா ராஜபக்‌ஷா, லியம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் ஷர்மா, ரிஷி தவான், ககிஸோ ரபாடா, ராகுல் சஹார், ஆர்ஷ்தீப் சிங், சந்தீப் ஷர்மா.

banner

Related Stories

Related Stories