விளையாட்டு

மீண்டும் தோனியிடம் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டது ஏன்? - CSK உரிமையாளர் ஸ்ரீநிவாசன் விளக்கம்!

சி.எஸ்.கே. கேப்டன்சி தோனி வசமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த போட்டியில் சென்னை அணி வெற்றியையும் பதிவு செய்ததிருந்தது.

மீண்டும் தோனியிடம் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டது ஏன்? - CSK உரிமையாளர் ஸ்ரீநிவாசன் விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவை அணி நிர்வாகம் நியமித்தது. ஏனெனில், கடந்த ஐ.பி.எல். தொடரின் போது ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் எதிரொலியாக சி.எஸ்.கே. கேப்டன்சி தோனியிடம் இருந்து அவருக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால், நடப்பு ஐ.பி.எல். போட்டி தொடங்கியதில் இருந்தே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சென்னை அணி பெரிதாக சோபிக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையில், சென்னை, ஐதராபாத் அணியிடையேயான நேற்றைய (மே 1) லீக் ஆட்டத்தின் போது பழையபடி சி.எஸ்.கே. கேப்டன்சி தோனி வசமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த போட்டியில் சென்னை அணி வெற்றியையும் பதிவு செய்ததிருந்தது.

மீண்டும் தோனியிடம் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டது ஏன்? - CSK உரிமையாளர் ஸ்ரீநிவாசன் விளக்கம்!

இதனால் தோனி கேப்டனாக களமிறங்கினாலே சென்னை அணி வெற்றிக்கனியை ருசிக்கும் என்றும் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜடேஜாவிடம் இருந்து மீண்டும் தோனிக்கே கேப்டன்சி பொறுப்பு கொடுக்கப்பட்டது தொடர்பாக சி.எஸ்.கே. அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாசன் பேசியிருக்கிறார்.

அதில், "பேட்டிங் மற்றும் பவுலிங் லெவலில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை குறிப்பிட்டே ஜடேஜா கேப்டன் பொறுப்பை துறக்க முடிவு செய்திருக்கிறார். அவரேதான் தோனியை கேப்டன்சி செய்யுமாறும் கூறினார். அணியின் நலனுக்காகவே மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்பதாக தோனியும் கூறியிருக்கிறார்" என ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜடேஜா குறித்து பேசியுள்ள தோனி, "கேப்டன் பொறுப்பு என்பது மெதுவான மாற்றமாக இருக்க வேண்டும். ஜடேஜாதான் அணியை வழி நடத்த வேண்டும் என விரும்பினேன். ஆனால் சீசன் முடிந்தவுடன் வெறும் டாஸ் போடுவதற்காக மட்டுமே கேப்டன்சி பொறுப்பில் இருந்ததாக அவர் எண்ணிவிடக்கூடாது" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories