விளையாட்டு

தோல்வியை தடுத்து வெற்றிக்கு அழைத்து செல்வாரா?: மீண்டும் கேப்டனான தோனி!

சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

தோல்வியை தடுத்து வெற்றிக்கு அழைத்து செல்வாரா?: மீண்டும் கேப்டனான தோனி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

போட்டி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

இடம்: வான்கடே ஸ்டேடியம், மும்பை

நேருக்கு நேர்:

போட்டிகள்: 17

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி: 5

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி: 12

சிறந்த பேட்டர்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் ஷர்மா - 8 போட்டிகளில் 285 ரன்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷிவம் தூபே - 8 போட்டிகளில் 247 ரன்கள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: உம்ரன் மாலிக் - 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்

சென்னை சூப்பர் கிங்ஸ்: 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகள்

2022 ஐபிஎல் தொடரில் இதுவரை: இதுவரை 8 போட்டிகளில் விளையாடியிருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 5 வெற்றிகளும் 3 தோல்விகளும் பெற்றிருக்கிறது. 10 புள்ளிகளோடு புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது அந்த அணி. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் குறைந்தபட்சம் மூன்றாவது இடம் வரை முன்னேறலாம். வான்கடே ஸ்டேடியத்தில் ஒரேயொரு போட்டியில் மட்டும் விளையாடியிருக்கும் ராஜஸ்தான், அந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராக தோல்வியடைந்தது. ஒன்பதாவது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், 8 போட்டிகளில் இரண்டில் மட்டும் தான் வென்றிருக்கிறது. மற்ற 6 போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கிறது நடப்பு சாம்பியன். இந்தப் போட்டியில் நல்ல ரன் ரேட்டில் வென்றால், எட்டாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸை பின்னுக்குத்தள்ளி அந்த இடத்துக்கு முன்னேறலாம். வான்கடே மைதானத்தில் இரண்டு போட்டிகளில் விளையாடியிருக்கும் சென்னை (vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் & பஞ்சாப் கிங்ஸ்), இரண்டு போட்டிகளிலுமே தோற்றிருக்கிறது. இந்த சீசன், இந்த இரண்டு அணிகளும் மோதிய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுக்க, 17.4 ஓவர்களில் அதை சேஸ் செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இளம் வீரர் அபிஷேக் ஷர்மா அரைசதம் அடித்து அசத்தினார்.

தோல்வியை தடுத்து வெற்றிக்கு அழைத்து செல்வாரா?: மீண்டும் கேப்டனான தோனி!

கடைசிப் போட்டியில்: கடைசிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராகத் தோல்வியடைந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி அதை கடைசிப் பந்தில் சேஸ் செய்தது. கடைசி ஓவருக்கு 22 ரன்கள் தேவை என்றிருந்த நிலையில், அதை அடித்தார் குஜராத் அணியின் துணைக் கேப்டன் ரஷீத் கான். சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் கடைசிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 176 ரன்கள் மட்டுமே எடுத்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மாற்றங்கள்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிகப்பெரிய மாற்றமாக, எம்.எஸ்.தோனி மீண்டும் கேப்டனாகியிருக்கிறார். இந்த சீசன் கேப்டனாக இருந்த ரவீந்திர ஜடேஜா, தன் சொந்த ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புவதால், அவரின் இம்முடிவை எற்று, மீண்டும் அணியை வழிநடத்தத் தயாராகிவிட்டார் தோனி. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிட்செல் சான்ட்னர் இடத்தில் மீண்டும் மொயீன் அலி களமிறக்கப்படலாம்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (C), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரண் (WK), வாஷிங்டன் சுந்தர், சஷாங் சிங், மார்கோ யான்சன், புவ்னேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரன் மாலிக்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மிட்செல் சான்ட்னர் / மொயீன் அலி, ஷிவம் தூபே, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (C) (WK), டுவைன் பிரிட்டோரியஸ், டுவைன் பிராவோ, முகேஷ் சௌத்ரி, மஹீஷ் தீக்‌ஷனா

banner

Related Stories

Related Stories