விளையாட்டு

“மகனே நீ எங்கள் தேவதை..” - மகனை இழந்த சோகத்தில் ரொனால்டோ உருக்கம் : ஆறுதல் கூறும் ரசிகர்கள் !

கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மகனே நீ எங்கள் தேவதை..” - மகனை இழந்த சோகத்தில் ரொனால்டோ உருக்கம் : ஆறுதல் கூறும் ரசிகர்கள் !
OSCAR DEL POZO
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நட்சத்திர கால்பந்து வீரரான கிஸ்டியானா ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடியபோது ஜெர்ஜினா ரோட்ரிக்ஸை காதலித்து கரம் பிடித்தார். பின்னர் இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தது. இதையடுத்து மீண்டும் ஜெர்ஜினா கர்ப்பமாக இருந்துள்ளார்.

மேலும் கடந்த மாதம், நாங்கள் இரட்டை குழந்தைகளை எதிர்ப்பார்ப்பதாக ரொனால்டோ தனது சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், அண்மையில் ஜெர்ஜினாவுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இதில், ஆண் குழந்தை இறந்துவிட்டதாகவும், பெண் குழந்தை நலமுடன் இருப்பதாக ரொனால்டோ தனது சமூக வலைதளப்பக்கத்தில் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவைப் பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கிறிஸ்டியானா ரொனால்டோவின் சமூகவளைதளப் பதிவில், “எங்கள் ஆண் குழந்தை இறந்துவிட்டதை ஆழ்ந்த சோகத்துடன் தெரிவிக்கிறேன். எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலி இது. பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்த தருணத்தில் ஓரளவு நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வலிமை அளிக்கிறது.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கவனிப்பு மற்றும் ஆதரவிற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். இந்த இழப்பில் நாங்கள் அனைவரும் சோகத்தில் ஆளாகியுள்ளோம். இந்த கடினமான நேரத்தில் தனிமையை கேட்டுக்கொள்கிறோம். “எங்கள் மகனே, நீ எங்கள் தேவதை”. நாங்கள் எப்போதும் உங்களை நேசிப்போம்' என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, "உங்களின் இந்த துக்கத்தில் நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்" என அரவது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories