விளையாட்டு

“ஐ.பி.எல் போட்டிகள் ரத்து?” : டெல்லி வீரருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வைரலாகும் #Cancel_IPL மீம்ஸ்!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“ஐ.பி.எல் போட்டிகள் ரத்து?” : டெல்லி வீரருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வைரலாகும் #Cancel_IPL மீம்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

15வது ஐ.பி.எல் சீசன் தற்போது ரசிகர்களின் உற்சாக ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் சென்னை அணியும், அதிக முறை சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் நடப்பு தொடரில் மிகவும் மோசமாக விளையாடி வருகின்றன.

இந்த இரண்டு அணிகளும் இந்த சீசனில் play off சுற்றுக்கு செல்வதே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இதனால் சென்னை, மும்பை அணி ரசிகர்கள் மிகவும் கவலையுடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி அணி வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லி அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த அணி நாளை மறுநாள் பஞ்சாப் கிங்கஸ் அணியை எதிர்கொள்ள இருந்தது. தற்போது டெல்லி வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்தப் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியை தள்ளிவைத்ததைப் போல் இந்த முறை போட்டிகள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நடப்பு சீசனில் சென்னை, மும்பை அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்து கடைசி இடத்தில் இருப்பதால் இந்த அணியின் ரசிகர்கள் சோகக் கடலில் மூழ்கியுள்ளனர். மேலும் ஒருமுறை கூட ஐ.பி.எல் கப் வாங்காத பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

மேலும் புதிதாக இணைந்துள்ள குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த முறை தங்களால் சாம்பியன் ஆக முடியாது எனும் நிலைக்கு வந்துள்ள சென்னை, மும்பை அணியின் ரசிர்கள் ஐ.பி.எல் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories