விளையாட்டு

மைதானத்திலேயே கண்ணீர் விட்ட ராஸ் டெய்லர்... ரசிகர்களையும் கலங்க வைத்த காட்சி! #5in1_Sports

வருகிற 7 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்காக டேவிட் வார்னர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பப்டுகிறது.

மைதானத்திலேயே கண்ணீர் விட்ட ராஸ் டெய்லர்... ரசிகர்களையும் கலங்க வைத்த காட்சி! #5in1_Sports
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. நியூசிலாந்து அணி வெற்றி!

நெதர்லாந்து அணி நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 115 வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. கப்டில் 106 ரன்களும், வில் யங் 120 ரன்கள் குவித்தனர். நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 333 ரன்கள் எடுத்திருந்தது. 334ர ன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நெதர்லாந்து அணி 42.3 ஓவர்களுக்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தோல்வியை தழுவியது.

2. வங்கதேச அணி படுதோல்வி!

வங்கதேச அணி தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடந்தது. முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டெம்பா பவுமா 93 ரன்களை குவித்து 7 ரன்னில் சதத்தை தவறவிட்ட நிலையில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் மஹ்மதுல் ஹசன் ஜாயின் அபார சதத்தால் முதல் இன்னிங்ஸில் 298 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர் 69 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி, 204 ரன்கள் எடுத்து 274 ரன்கள் என்ற இலக்கை வங்கதேசத்துக்கு நிர்ணயித்தது. ஆனால் வங்கதேச அணி 19 ஓவரில் 53 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 220 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

3. டெல்லி அணிக்காக களமிறங்கும் டேவிட் வார்னர்!

பாகிஸ்தான் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ஐபிஎல்-லில் டெல்லி அணிக்காக டேவிட் வார்னர் களமிறங்குகிறார். பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்க வார்னர் மும்பை வந்தடைந்தார். தற்போது அவர் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 7 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்காக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பப்டுகிறது.

4. ராஸ் டெய்லர் ஓய்வு!

நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையே 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியோடு நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். போட்டி தொடங்குவதற்கு முன்னாதாக நியூசிலாந்து அணியின் தேசிய கீதம் ஒலித்தது. நியூசிலாந்து அணி வீரர்களுடன் டெய்லரின் குழந்தைகளும் அதில் இடம்பெற்றனர். அப்போது டெய்லர் கண் கலங்கியபடி பாடினார். பாடல் முடிந்ததும் அவரது மகளுக்கு முத்தம் கொடுத்தபடி செல்லும் வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் நெகிழவைத்தது.

5. பும்ரா ஸ்டைலில் பந்து வீசிய ஆஸ்திரேலிய வீரர்!

உலகின் முன்னனி வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவின் பும்ரா ஸ்டைலில் ஆஸ்திரேலியா வீரர் பந்து வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஆஸ்திரேலியாவில் ஷெஃபீல்ட் ஷீல்டு என்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் மேற்கு ஆஸ்திரேலியா -விக்டோரியா ஆகிய அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் விக்டோரியா அணியை சேர்ந்த நிக் மேடின்சன் 2-வது இன்னிங்சில் 160-வது ஓவரை வீசினார்.

அவர் வீசிய ஸ்டைல், இந்திய பந்து வீச்சாளர் பும்ரா மாதிரி இருந்தது. அப்போது மற்ற வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவரது பந்து வீச்சை பார்த்து சிரித்தனர். இந்த வீடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories